இயற்கை விவசாயமே தீர்வு

இந்தியாவின் மக்கள் தொகைக்கும் இன்னும் பல காரணங்களுக்காகவும் இப்போதைக்கு இயற்கை விவசாயம் சாத்தியமில்லை எனினும் அது பலன் இல்லாதது என சொல்ல முடியாது

70 வருடங்களுக்கு முன்பு இன்றைய நவீன விவசாயமில்லை, இரண்டாம் உலகபோரும் அது கொடுத்த பஞ்சமும் இவ்வுலகை ரசாயண விவசாயம் பக்கம் திருப்பின, குறிப்பாக மக்கள் தொகை மிகுந்த இந்தியாவில் அது அவசியமானது.

இன்று அதுவே இந்தியாவின் பசியினை போக்குகின்றது, அதே நேரம் உலக நிலைப்பாட்டையும் ஒப்பிட்டு பார்க்கலாம்

ஒவ்வொரு நாடும் தன் மக்கள் நலமே நாட்டு நலம் என்பதில் கடும் அக்கறை கொண்டிருக்கின்றன, மக்கள் நலனே நாட்டின் எதிர்காலம் பலம் என அவை உணர்ந்திருக்கின்றன‌

ஒவ்வொரு நாடும் உடற்பயிற்சி வசதி , உணவு தரம் இன்னும் ஏகபட்ட விஷயங்களில் மக்களுக்கு கண்ணும் கருத்துமாய் பாடுபட்டுகொண்டிருக்கின்றன‌

அந்த நாடுகளின் உணவு தரத்தை உற்று பார்க்கின்றேன், குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா

ஆம் பலவகை நோய்கள் ஏன் வருகின்றன என கடும் ஆராய்ச்சியில் இறங்கிய அவர்கள் இயற்கை விவசாயமே தீர்வு என உணர்ந்து அதில் இறங்கிவிட்டார்கள்

அது விளைச்சல் குறைவு என்பதால் விலை அதிகம், ஆனால் அவர்கள் அதைத்தான் உண்ண சொல்லுகின்றார்கள்

எப்படி எல்லாம் மக்களுக்கு அறிவுறுத்துகின்றார்கள்?

அமெரிக்க ஐரோப்பிய உணவு பொருட்கள் மட்டுமல்ல பற்பசை போன்ற மனிதர் பயன்படுத்தும் அனைத்திலும் எது ரசாயாணம் எது பாதி ரசாயாணம் எது இயற்கை பொருள் என அவர்களே குறியீடாக சொல்கின்றார்கள்

உதாரணம் பற்பசை முதல் பிரட் வரை பாக்கெட் ஓரத்தில் ஒரு அடையாளம் வைக்கின்றார்கள்

கருப்பு என்றால் அது முழு ரசாயாணம், நீலம் என்றால் நல்ல பொருள், சிகப்பு என்றால் அரைகுறை

இந்தியாவில் பற்பசையினை எடுங்கள் அடிப்பாகம் கருப்பு மட்டுமே காணமுடியும் மற்ற நிறங்களை நீங்கள் பார்க்க முடியாது

பாக்கெட் பழங்களில் எப்படி அடையாளபடுத்துகின்றார்கள் என்றால் பார்கோட் எனப்படும் நம்பருக்கு கீழ் சில இலக்கம் வரும்

அது 4ல் தொடங்கினால் ரசாயாணம், 5ல் தொடங்கினால் மரபணு மாற்றபட்டது, 9ல் தொடங்கினால் இயற்கை விவசாய பழம்

ஆனால் நீங்கள் தலைகீழாக நின்றாலும் 9ல் தொடங்கும் இயற்கை விவசாய ஆப்பிளையோ ஆரஞ்சையோ காய்கறியினையோ மற்ற நாடுகளில் பார்க்க முடியாது

எல்லாம் 4ல் தொடங்கும் ரசாயாணம்

அதாவது நன்கு மேற்கு நாடுகளை கவனித்தால் ஒன்று விளங்குகின்றது

தங்கள் நாடுகளில் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து தங்கள் நாட்டு மக்களை காக்கின்றார்கள்

ஆனால் அடுத்த நாட்டு மக்கள் குறிப்பாக ஆசிய ஐரோப்பிய மக்கள் எப்படியும் போகட்டும் என அங்கு கண்டதையும் விற்று வியாபாரம் செய்கின்றார்கள்

நம்மாழ்வார் சொன்னதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை

சந்தேகம் இருந்தால் பொருட்களில் இருக்கும் சிறிய வர்ண குறியீடுகளையும் சில பார்கோட் நம்பர்களையும் கவனியுங்கள்

அவை என்ன தெரியுமா?

இது எல்லாம் இந்த வகைதான், வாங்கி தின்று சாகவேண்டுமென்றால் சாவு, காசு இருக்கின்றதா நல்லதாக வாங்கி பிழைத்துகொள் எனும் ஒருவகை எச்சரிக்கை

தன் நாட்டு மக்களுக்கு ஒரு பாதுகாப்பு என்றும் அடுத்த நாட்டு மக்கள் வாழ்வில் வியாபாரம் எனும் பெயரில் விஷத்தை கொடுக்கும் கொடூரம்

ஏதும் கேட்டால் முறையாக எச்சரித்துதான் விற்கின்றோம், அதை உங்கள் அரசும் மக்கள் நல அரசு அமைப்புகளும்தான் முன்னெடுக்க வேண்டும் என சிரிக்காமல் சொல்வார்கள்

உலகம் அப்படித்தான், நம்மை நாமேதான் காப்பாற்றிகொள்ள வேண்டும்

உலகம் மிக கவனமாக இயற்கை பொருளுக்கும் பாதுகாப்பான உணவுக்கும் மாறிகொண்டேதான் இருக்கின்றது

இங்குதான் எல்லாம் சர்ச்சையாகின்றது