இஸ்லாமிய பெண் எழுத்தாளர்
பொதுவாக இஸ்லாமிய சமூகத்தில் பெண் எழுத்தாளர்கள் குறைவு அதுவும் பெண்ணியம் பேசுபவர்கள் மிக குறைவு
ஆனால் அந்த பெண்மணி முதலிலே வித்தியாசமாக நோக்கபட்டார், அவரின் கவிதைகள் ஒருவித அணலை ஏற்படுத்தின
அந்த அணல் பின்னாளில் அவர் அந்த நாவலை எழுதும்பொழுது உலகை அதிர வைத்தது
அந்நாவல் “அர்த்த ஜாமத்து கதைகள்” , இஸ்லாமிய பெண்களின் நிலை பற்றி முகத்தில் அறைந்த புத்தகம் அது
பெரும் அதிர்வுகளை மனதில் கொடுக்கும் வலி நிறைந்த நாவல், கொஞ்சம் பொறுமையுடன் நுண்ணிய ரசனையுடன் வாசிக்க வேண்டிய நாவல் அது.
வாசிப்பு பழக்கம் அதிகம் இல்லா தமிழகத்தில் அந்த நாவல் சில சலசலப்பினை ஏற்படுத்தியதோடு ஓய்ந்தது ஆனால் உலகளவில் அது சல்மான் ருஷ்டி, தஸ்ரிமா நஸ்ரின் போல அவரும் நோக்கபட்டார்.
உறுதியாக சொல்லலாம், ஈரானிய கோமேனி போன்றவர்கள் இந்த நாவல் வரும்பொழுது இருந்திருந்தல் நிச்சயம் அவர் தலைக்கு கோடி விலை அறிவித்திருப்பார்
அப்படிபட்ட அதிர வைத்த எழுத்தாளர் Rajathi Salma
இஸ்லாமை பற்றி அவர் எழுதி சலசலப்பு வந்தாலும் மக்களிடம் அவருக்கு ஒரு வரவேற்பு இருந்தது, சுயேட்சையாக போட்டியிட்டு வென்று பேரூராட்சி தலைவராகவும் இருந்தார்.
அப்பொழுதுதான் கலைஞர் அவரை கட்சியில் சேர்த்தார்
ஒரு விஷயத்தில் கலைஞர் பாராட்டுகுறிவர், அவருக்கு எழுத்தாளர்களையும் சிந்தனையாளர்களையும் நிரம்ப பிடிக்கும்
கட்சிக்கு அப்படியானவர்கள் தேவை என்றும், இஸ்லாம் மற்றும் பெண்கள் வாக்கு என பலகணக்குகளை கணித்து அவரை அரசியலுக்கும் கொண்டுவந்தார்
அதன்பின்பு திமுகவின் மகளிரணி முக்கியஸ்தர் ஆனார் அவர்
நிச்சயம் சொல்லலாம் திமுகவில் சேர்ந்தபின் அவரிடம் அந்த பழைய நெருப்பு கொட்டிய எழுத்துக்கள் ஏனோ இல்லை
இன்று இந்தியாவின் குறிப்பிடதக்க பெண் எழுத்தாளர் அவர், அவரின் அர்த்த ஜாமத்து கதைகள் நாவல் அமெரிக்க பல்கலைகழகத்தின் பிராதன ஆய்வு புத்தகம்
ஐரோப்பா அமெரிக்கா என உலகெல்லாம் அவருக்கு ஏராளமான பெண் எழுத்தாளரும் சிந்தனையாளரும் உண்டு எனும் அளவில் அவரின் முகம் அறியபட்டது
இந்திய எழுத்தாளர்களில் இன்று சிறப்பானவர்கள் பட்டியலில் அவருக்கும் இடம் உண்டு
சந்தேகமில்லை அவர் தமிழகத்து “தஸ்லிமா நஸ்ரின்”. அந்த என்பவருக்கு இன்று பிறந்த நாள்
இறுக்கமும் கட்டுபாடும் மிகுந்த சமூகத்தில் இருந்து அவைகளை விமர்சித்து ஒரு நாவல் எழுதுவது என்பது தீகுளிப்பதற்கு சமம்
அவர் அதை சவாலாக செய்தார்.
இன்று ஒரு இஸ்லாமிய பெண் டிக்டாக் வந்ததற்காக அவருக்கு விவாகரத்தே வாங்கி கொடுத்திருக்கும் கும்பல் அவரை எப்படி மிரட்டியிருக்கும்
அவர் திமுகவில் சேர்ந்தபின்பே அந்த மிரட்டல் ஓய்ந்தது
என்பவரை திமுக மேடைகளில் பார்க்கும்பொழுதெல்லாம் ஒரு விஷயம்தான் தோன்றும்
எழுத்தாளர்களுக்கும், முற்போக்கு சிந்தனை கொண்டோருக்கும் அடைக்கலம் கொடுத்தது திமுக எனும் இயக்கம் மட்டுமே
அதன் அடிப்படையும் கட்டுமானமும் அப்படியானது, எம்மதம் ஆயினும் மானுடத்தை நேசிக்கும் எழுத்தாளருக்கு அங்கு எந்நாளும் முன்வரிசையில் இடம் உண்டு
அதைத்தான் Rajathi Salmaவிக்கு கிடைத்த அரசியல் அங்கிகாரம் அறுதியிட்டு சொல்கின்றது
அவருக்கு இன்று பிறந்த நாள், கலைஞரால் கைதூக்கிவிடபட்டவர்கள் வரிசையில் அவருக்கும் நிச்சயம் இடம் உண்டு
நல்லதோர் வீணையொன்று மத மற்றும் பல கட்டுப்பாடுகளால் அடைக்கபட்டிருந்தது
அதை காலசுவடு பத்திரிகை உலகிற்கு காட்டியது, திமுக அது அழகாக பாட பாதுகாப்பும் வழியும் செய்து கொடுத்தது
கலைஞரால் கை தூக்கிவிடபட்டவர்கள் பெரும் உயரம் அடைந்தது போல இவரும் இன்னும் உயரட்டும்
கலைஞர் போலவே நீண்ட வாழ்வினையும் அவர் பெறட்டும், வல்ல இறைவன் அவரை எல்லா நலன்களாலும் ஆசீர்வதிக்கட்டும்
