அங்கிள் சைமனின் அட்டகாசம்
அங்கிள் சைமனின் அட்டகாசம் திருக்குறளை திருத்துவது வரை சென்றாயிற்று
அன்னாரின் குறள்விளக்கத்துபடி மாடு என்பதை மேய் என திருவள்ளுவரே சொல்லிவிட்டாராம், ஆம் “மாடல்ல மற்றவவை” என சொல்லியிருக்கின்றாராம்
மாடு என்றால் 4 கால் மாடு என அன்னார் எந்த திருகுறளில் படித்தாரோ தெரியாது, மாடு என்பதற்கு செல்வம் , உயர்ந்த பொருள் என பொருள்படும்
தமிழில் கோமாதா, ஆ என்றெல்லாம் ஏகபட்ட பெயர்கள் மாட்டுக்கு உண்டு, மாடு என்பது இந்த கூட்டத்தை மட்டும் குறிக்கும் சொல் அல்ல, அது பொதுவான செல்வத்தை குறிப்பது
மாடம் என்பது அக்காலத்தில் உயர்ந்த இடத்தினை குறிப்பது
மருகமளுக்கு, அதாவது குடும்பத்து செல்வமாக வீட்டுக்கு வரும் மணமகளுக்கு பிராமண இனம் இன்றும் மாட்டு பெண் என்றே அழைக்கின்றது
அது மாற்றுபெண் அதாவது இன்னொரு பெண் என சொல்லபடும் வார்த்தை திரிந்து மாட்டும்பெண் ஆயிற்று என சிலர் சொன்னாலும், மாட்டுபெண் என்பது செல்வ மகள் என்றோரு வாதமும் உண்டு
ஒரு வாதத்துக்கு மாடு என வள்ளுவன் சொன்னது பசுமாடு என வைத்தாலும் வள்ளுவன் சொல்வது என்ன?
கேடில் விழுச்செல்வம் கல்வி என்றுதான் சொல்கின்றான், அதாவது மாடு எனும் செல்வத்தை விட கல்வியே பிராதானம் என்கின்றான் வள்ளுவன்
ஆனால் அங்கிளோ கல்வியினை விட மாடு மேய் என புதுகுறள் சொல்கின்றார், கொடுமை, பேதமை, தற்குறித்தனம்
ஆக அங்கிள் சைமன் சொல்லும் புதிய குறளின் விளக்கம் என்ன தெரியுமா?
வள்ளுவன் மாடு மேய்த்த தமிழன்
வள்ளுவன் ஒரு பால் வியாபாரி, அதனால் அறத்துபால், பொருட் பால், இன்பத்து பால் என பாடினான்
அக்காலத்தில் மாடியில் மாட்டை கட்டி தரையில் தூங்கினான் தமிழன், மாடு கட்டிய இடம் மாடம் ஆயிற்று
சுடலை மாடன், மாட சாமி எல்லாம் மாடு வளத்த முன்னோர்கள்
ஒரு பெண் 10 மாடுகளுடன் வந்தால்தான் தமிழன் தாலிகட்டினான் அத்தோடு அப்பெண் கணவனின் மாட்டையும் மேய்க்க வேண்டும் அதனால் மாட்டுபெண் ஆனாள்
இன்னும் ஏராளம் வரும்
ஆடு மாடு அக்கால செல்வம் என்றொரு கோணம் இருந்தாலும் ஒரு காலத்தில் ஆடுமாடு மேய்ப்பது மிக இழிவான தொழிலாக இருந்திருகின்றது
எகிப்தியர் ஆடுமாடுகளை ஓட்டிவந்த இஸ்ரவேல் இனங்களை அப்படித்தான் நடத்தியிருக்கின்றார்கள்
ஏன் பகவான் கண்ணன் எழும்பி அடிக்கும் வரை ஆயர்பாடி ஒடுக்கபட்ட மிக மட்டமாக நடத்தபட்ட இனமாகவே இருந்திருக்கின்றது
இன்னும் ஏராளமான சான்றை காட்ட முடியும்
வள்ளுவன் சொன்ன மாடு செல்வத்தை குறிப்பது, அங்கிள் சைமன் சொல்லும் மாடு அவர் உண்ணும் மாட்டை குறிப்பது
ஏற்கனவே திராவிட அழிச்சாட்டியத்தில் குறள் பல அர்த்தங்களுக்கு ஆளாகி குற்றுயிராய் கிடக்கின்றது
அதை கொன்று புதைக்க சைமன் கிளம்பிவிட்டார், உலகம் கொண்டாடும் தமிழனின் இலக்கியம் இவர்களிடம் சிக்கி படாதபாடு படுகின்றது
எமக்கு அச்சமெல்லாம் இந்த குறளுக்கு அங்கிள் சைமன் என்ன பதில் சொல்வார் என்பதுதான்
“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.”
இக்குறளின் பொருள் ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும் என வரும்
ஆனால் புணர்ச்சி என்றொரு வார்த்தை வந்து தொலைத்துவிட்டதே, இதற்கு அங்கிள் சைமன் விளக்கம் எப்படி இருக்கும் தெரியுமா?
எவனோ, எவளோ அவர்களுடன் உடலுறவு கொண்டுதான் உறவு வரும் என்றல்ல மாறாக நல்ல தமிழ் உணர்ச்சி இருந்தாலே ஒரே இனமாக எழுந்து விடலாம்.
அதனால் எளிய தம்பி தங்கைகள் உடலுறவினை விட உணர்ச்சியே பெரிதாக கருத வேண்டும்