எண்ணெய் இருக்குமிடமெல்லாம் நானிருப்பேன்

இந்துக்கள் இருக்குமிடமெல்லாம் நானிருப்பேன் என்ற வெறி கொள்கையுடன் சுற்றும் பாஜக போல எண்ணெய் இருக்குமிடமெல்லாம் நானிருப்பேன் என திரியும் நாடு அமெரிக்கா

இதற்கு ரகசிய ஆதரவு ஐரோப்பிய கும்பல்

ஏன்?

1967 அரபு இஸ்ரேல் போருக்கு பின் இனி இஸ்ரேலை வெல்லமுடியாது காரணம் பல ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் அவர்களுக்கு பின்னணி என புரிந்த அரபு நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கும் நாடுகளுக்கு எண்ணெய் இல்லை என ஸ்ட்ரைக் அறிவித்தன‌

அமெரிக்காவிடம் எண்ணெய் உண்டு என்றாலும் அதை தொட கூடாது உலகிலே சுரண்ட வேண்டும் என்ற வெறியோடு இருக்கும் நாடு அது, அதனால் அது யோசித்தது

ரஷ்யாவுக்கு எண்ணெய் நிரம்ப உண்டு என்பதால் அது களத்திற்கு வரவில்லை

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கலந்து எடுத்தமுடிவின் படி எண்ணெய் வளநாடுகளை ஒன்று காலடியில் வைக்க வேண்டும் இல்லை மிக குழப்பத்தை ஏற்படுத்தி எண்ணெய் வியாபாரம் தடையின்றி நடக்க வழிசெய்ய வேண்டும் என்றாயிற்று

அதன்பின்பே எண்ணெய்க்கான மாபெரும் யுத்தம் அரேபியாவில் தொடங்கிற்று

கர்ணல் நாசருக்கு பின் வலுவான தலமை இருக்க கூடாது என சதாமும் கடாபியும் அடுத்தடுத்து வீழ்த்தபட்டனர்

இப்பொழுது ஈராக்கில் அமெரிக்க வியாபாரம் உண்டெனினும் ஈரானின் அதிகாரமும் உண்டு

அது போக ஏமன் மற்றும் மகா முக்கியமாக லிபியாவில் நடக்கும் களபேரங்களிலும் ஈரானின் கை இருப்பதாக தகவல் உண்டு

லிபிய சிக்கல் உச்சத்திற்கு செல்கின்றது, கட்டுபாட்டை எடுப்பது அமெரிக்காவா ரஷ்யாவா இல்லை மறைமுக ஈரானா என ஏக போட்டி

இந்நிலையில்தான் அமெரிக்கா பலத்த அதிர்வினை ஏற்படுத்தும் வகையில் தன் யு.எஸ்.எஸ் லிங்கன் எனும் பிரமாண்ட போர்கப்பலை மத்திய தரைகடல் பக்கம் அனுப்புகின்றது

இந்த கப்பல் ஒரு நகரும் தீவுக்கு சமம், கிட்டதட்ட 100க்கும் மேற்பட்ட போர்விமானம் அவற்றுக்கான எரிபொருள் ஆயிரகணக்கான வீரர்கள், அது போக வெடிபொருள் , அணு உலையில் இயங்கும் ஆற்றல் என அதன் பலம் மிக பெரிது

அது போன்ற சில கப்பல்களை ராமேஸ்வரம் பக்கம் நிறுத்தினால் இலங்கைக்கு நடந்தே சென்றுவிடலாம் எனும் அளவு பிரமாண்டமானது

இந்த கப்பலை செலுத்துகின்றது அமெரிக்கா, இதன் வருகையால் மேற்காசியாவில் பதற்றம் ஆனால் இஸ்ரேலுக்கு வழக்கம் போல் மகிழ்ச்சி

இக்கப்பல் நிச்சயம் தனியாக வராது, இதற்கு பாதுகாப்பு கொடுக்க நாசகாரி கப்பல்களும், கடலடி பாதுகாப்பு கொடுக்க ஏகபட்ட நீர்மூழ்கி சகிதம் வரும் என்பதால் அந்த பகுதியில் கனத்த அமைதி

கப்பல் வரும் பகுதி சிரியாவினையும் லிபியாவினையும் மிரட்டும் பகுதி என்பதால் அமெரிக்காவின் குறி பெரும்பாலும் லிபியாவாக இருக்கலாம் என்கின்றது செய்திகள்

அந்த மகா முக்கியமான இடத்திற்கு அமெரிக்கா தன் மாபெரும் கடல்படை கலனோடு வந்திருப்பது நிச்சயம் பாரதூர விளைவுகளை ஏற்படுத்தும்