பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர்
பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன சந்திப்பு
இலங்கையில் குண்டுவெடித்தபொழுது இங்கு தேர்தல் நடந்தது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் சில உரசல்கள் இருந்தன, இந்த சிறிசேன கணக்கு வேறுமாதிரி இருந்தது
அவர் சீன சார்பு என்பதும், தேர்தலுக்கு பின்பு இங்கு காட்சிகள் மாறும் என கணக்கிட்டு சீனாவுக்கு ஓடியதும் அன்றே புகை கிளப்பின
இன்று மோடி வென்றவுடன் அய்யோ எசமான் என ஓடிவந்து நிற்கின்றார் சிறிசேனா
மோடியும் இலங்கைக்கு செல்வதாக சொல்லிவிட்டார்
இலங்கையில் சீனாவும் அமெரிக்காவும் அறிவிக்கபடா யுத்தம் நடத்தும் நிலையில், இந்தியாவும் களத்தில் அதற்குரிய இடத்தில் வலுவாக நிற்கின்றது