அட்டகாசமான நேசமணி காமெடி ரெடி
நேசமணி தலையில் சுத்தி விழுந்தது வேறு விஷயம்
ஆனால் அந்த சம்பவத்தால் இந்த திமுக கோஷ்டி மட்டும் அந்த நேசமணியுடன் வரும் சார்லி போல மண்டையில் அடிபட்டு சகலத்தையும் மறந்து ஒருமாதிரி நிலைக்கு சென்றுவிட்டதுதான் சோகம்
ஒருமாதிரி அவர்கள் பிதற்றுவதை பார்த்தால் அந்த “கோவாலு” நினைவுதான் வருகின்றது..
அதுவும் குறிப்பாக “பாஸ் அவனுக ரெண்டு பேர்தான் பாஸ் உங்கள கொலைபண்ண பார்த்தானுக” என வசனம் நினைவுக்கு வரும்பொழுது மோடியும் அமித்சாவும் நினைவுக்கு வருகின்றார்கள்
1 லட்சம் ரூபாய் காண்ட்ராக்ட், 2 பேர் கடத்ததுனது என பல காமெடிகளை முடிச்சுபோட்டு பாருங்கள்
“அடேய் இதாம்டா பேலஸ், கைய கால பிடிச்சி வாங்கின காண்ட்ராக்ட்டுடா..” என புலம்பும் காட்சிக்கு முக ஸ்டாலினும், “பாஸ் அவனுக 2 பேர் பாஸ்” என மோடி அமித்ஷாவினை காட்டும் திமுகவினராக சார்லியினையும் பொருத்துங்கள்
அட்டகாசமான நேசமணி காமெடி ரெடி
இதற்கு மேல் கரிபூசபட்ட வடிவேலு நிற்கும் காட்சி நினைவுக்கு வந்தால், அப்படியே தேர்தல் முடிவும் நினைவுக்கு வந்தால் சங்கம் பொறுப்பல்ல..
