இதற்கு முதல் காரணம் மாமன்னன் ராஜராஜ சோழன்

வழக்கமான வீடியோவாகத்தான் அதை வெளியிட்டோம், சொல்ல போனால் முன்பொருமுறை எப்பொழுதோ ரஞ்சித் என்பவர் சர்ச்சை செய்யும்பொழுது எடுக்கபட்ட வீடியோ அது

அதை வெறும் 150 பேர்தான் பார்த்தார்கள், இனி ரஞ்சித்தை தொட கூடாது என விட்டுவிட்டோம்

அன்று நண்பர் அழைத்தார், ரஞ்சித் ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை பற்றி பேசசொன்னார்

நிதானமாத்தான் பேச தொடங்கினேன், ஆனால் ஆயிரத்தில் ஒருவன் கார்த்தி போல எனக்குள் என்னமோ ஆயிற்று

அதை உணரமுடிந்தது ஆனால் கட்டுபடுத்தமுடியவில்லை, ஏதோ பேசினேன், யாரோ உடலுக்குள் புகுந்து பேச சொன்னது போலவே இருந்தது , அப்படி ஒரு இழை ஓடியது

அவர் 4 நிமிடம் கேட்டார், நாம் 15 நிமிடம் பேசினோம், விஷயம் முடிந்தது

ஆனால் அது இவ்வளவு பற்றி எரியும் என நினைக்கவில்லை பல லட்சங்களை தாண்டி ஆங்காங்கே ஓடுகின்றது

மகா சோகமான விஷயம் என்னவென்றால் அதை “அரசியல் 360” பக்கத்தில் பார்த்தது 2 ஆயிரம் பேர்

மற்ற பக்கங்களில் பார்த்தது பல லட்சம் பேர்

நிச்சயம் நாம் யாரையும் புண்படுத்தவோ இல்லை மட்டம் தட்டியோ பேசவில்லை. நியாயங்களை சொன்னோம், நடந்தது நடப்பவற்றின் நியாயாமான பக்கம் நின்றோம்.

பலர் அழைத்து பாராட்டினார்கள், ஏகபட்ட வாழ்த்து செய்திகள்

சார் எழுத்துமட்டுமல்ல, பேச்சும் உங்களுக்கு வருகின்றது என்றார்கள், அதுபற்றி எனக்கே சொல்ல‌ தெரியவில்லை.

நெல்லை தமிழை தவிர வேறு மாதிரி பேச தெரியாததால் எப்பொழுதுமே எமது பேச்சுவழக்கு பற்றி எமக்கொரு தாழ்வு மனப்பான்மை உண்டு.

சிலர் கொஞ்சம் ஓவர் என குறைபட்டார்கள், இது கூட பேசாவிட்டால் என்ன தமிழன் உணர்ச்சி? என சொன்னபின் சத்தமில்லை

எப்படியோ சில அதிர்வுகளை கொடுத்துவிட்டோம் என்பது உண்மை, பெரும் வரவேற்பு கொடுத்தவர்களுக்கு நன்றிகள்..

இதற்கு முதல் காரணம் மாமன்னன் ராஜராஜ சோழன், அடுத்தமுறை பெருவுடையாரை வணங்கிவிட்டு வரவேண்டும்