அய்யா முதல் திராவிட முதல்வன் நான், அதை நினைத்தால்

“அய்யா, உங்கள் பெயரை சொன்னார்கள் தமிழை சொன்னார்கள். ஆனால் “அண்ணா வாழ்க..” என் பெயரை ஒருவனும் பார்லிமென்டில் சொல்லகாணோம் கண்டீரா? வேதனை அவமானம் வெட்கம்..

என்ன வெங்காயம் வெட்கம்? நான் கோடிகணக்கில சொத்துவிட்டுட்டு வந்துருக்கேன், நீ என்ன விட்டுட்டு வந்தே? அதான் ஒரு பயலும் உன்ன நினைக்கல வெங்காயம்..

அய்யா நானே கட்சி கண்டேன், நானே ஆட்சி கண்டேன்

என்ன கண்டு என்ன கிழிச்சே? உன் பிள்ளைகள வச்சியா? உன் மருமகனை கட்சியில வச்சியா? ஒண்ணுமில்ல. இன்னைக்கும் உன் கல்லறையில ஒரு காய்ஞ்ச பூ கூட இல்ல, ஆனா கருணாநிதி பயலுக்கு எவ்வளவு மாலை பாத்தியா?

ஆமா அய்யா தாங்கலை, இவ்வளவுக்கும் திமுக முதல் பார்லிமென்ட் எம்பி நான், திராவிட கருத்தை முதலில் அங்கு முழங்கியவன் நான், அதை நினைத்தால்தான்…..

இதுக்குத்தான் சொன்னேன் கட்சி வேணாம், இங்க பூரா அயோக்கிய பயலுகண்ணு, கேட்டீயா? இனி தனியே இருந்து அழு வெங்காயம், உனக்குத்தான் எதையும் தாங்கும் இதயம் இருக்கே, நல்லா அழு

அய்யா முதல் திராவிட முதல்வன் நான், அதை நினைத்தால்

வெங்காயம், அதுக்குத்தான் உன் தம்பி, உன் இதயகனி, அவனோட இதயகனி எல்லாம் வரிசையா உன் கிட்டேயே வச்சிருக்கு நல்லா அழு, நமக்கு அரசியல் வேண்டாம்னு எவ்வளவு சொன்னேன் கேட்டீரா? நல்லா இருந்து பாரும்..