இதெல்லாம் ஒரு தொழிலா
முதல்படம் சீனாவின் நான் ஜிங் நகரில் பெரும் சாலையில் வைக்கபட்டிருக்கும் கூடைபந்து விளம்பரம்
இரண்டாவது படம் அதை காப்பியடித்து நம்ம ஊர் இயக்குநர்கள் செய்திருக்கும் அப்பட்டமான விளம்பரம்
பொதுவாக விஜய் ரசிகர்கள் பள்ளி மாணவர்கள் என்பதும் அவர்கள் பள்ளி புத்தகங்களை கூட சரியாக புரட்டாதவர்கள் என்பதும் இயக்குநர்கள் நம்பிக்கை
அவ்வளவு அறிவு இருந்தால் ஏன் விஜய்படம் பார்க்க வருகின்றார்கள் என அவராக நினைத்து கொண்டு காப்பியடிப்பார்
விஜயின் ரசிகர்களும் அந்த நம்பிக்கையினை அப்படியே காப்பாற்றுவார்கள்
வழக்கமாக மேற்கு ஹாலிவுட்டில் இருந்து இம்மாதிரி ஸ்டில்களை இயக்குநர்கள்
காப்பியடிப்பார், இம்முறை கிழக்கே சென்றுவிட்டார்
ஸ்டில்களை மட்டும்தான் இப்படி காப்பியடிப்பாரே தவிர அன்னார் கதைகளை மட்டும் கண்டிப்பாக தமிழ் படங்களில் இருந்தே உருவுவார்
எல்லா படங்களையும் கலைத்து போட்டு 4 காட்சி உருவினால் விஜய் இயக்குநர்கள்
படம் ரெடி, பாக்கெட்டும் நிரம்பும்
பார்த்து தொலைக்க அணில் குஞ்சுகள் இருப்பதால் வேறு எந்த கவலையும் அவருக்கு இல்லை
குறிப்பாக வெட்கம் மானம் என்பதெல்லாம் கொஞ்சமுமில்லை
இது அட்லி வேலையா, முருகதாஸ் வேலையா என்பது தெரியவில்லை ஆனால் இருவருக்கும் இதுதான் தொழில்
உலகநாடுகளின் இயக்குநர்கள் எல்லாம் தங்களுக்கு அசிஸ்டென்டுகள் என அவர்களாக நினைத்துகொள்வார்கள்
இதெல்லாம் ஒரு தொழிலா என கேட்டால், இது மட்டும்தான் தொழில் என பதில் வரும்


