ஆடை படத்து டிரைலர்
ஆடைி படத்து டிரைலர் வந்து விவாதமாகிவிட்டது, அதில் அமலாபால் என்பவர் ஆடையின்றி வந்திருக்கின்றார் என ஏக சர்ச்சைகள்
படத்தின் பெயர் ஆடை என்றால் , படம் முழுக்க அமலாபால் ஆடையில் வரவேண்டுமா என்ன?
இது நிச்சயம் ஒரு விளம்பரம், சென்சார் அதிகாரிகள் சர்வ நிச்சயமாக கத்தரி போட்டுவிடுவார்கள்
தமிழகத்தில் மிக மிக கொடுத்து வைத்தவர்கள் சென்சார் அதிகார்கள்தான், பலமுறை பார்த்துவிட்டுத்தான் காட்சியினை வெட்டுவார்களாம்.
கவனியுங்கள் அவர்கள் மட்டும் பலமுறை பார்க்கலாம், நாம் பார்த்துவிட கூடாது என்பது சென்சார் நீதி.
படத்தின் டிரைலரில் அப்படி ஒன்றும் தெரியவில்லை, ஆனால் ஒரு விஷயம் உண்மை
பெண்ணுரிமை பற்றி நெற்றியடி வசனம் நிறைய வருகின்றது , கூர்மையான வசனங்கள் அவை..
ஒரே பெண் முதல்வர், ஒரே பெண் பிரதமர், ஒரே பெண் ஜனாதிபதி என கடுமையான பெண்ணுரிமை வசனங்கள்
ஆக என்ன தெரிகின்றது?
யாருக்கும் தெரியாமல் இந்த Devi Somasundaram என்பவர் சினிமா உலகில் வசனம் எழுத சென்றுவிட்டார் , அவரேதான் அவர்தான் எழுதியிருக்கின்றார், அதை சூடம் ஏற்றி சத்தியம் செய்து சொல்லலாம்.
சொல்லமுடியாது அம்மணியே தயாரித்தும் இருக்கலாம்