இந்தி திணிப்பினை போன்ற ஒரு வலுகட்டாய திணிப்பு
இன்று சர்வதேச யோகா தினம் , பொதுவாக பள்ளிமாணவர்களை ஒழுங்காக விளையாடவிட்டாலே அவர்களுக்கு மனதிற்கும் உடலுக்கும் மிக நல்லது
அந்த சிட்டுகுருவி கூட்டத்தை, அடைத்து வைத்திருக்கும் முயல் கூட்டத்தினை திறந்து விளையாட விட்டாலே நல்லது
அதைவிடுத்து இந்த யோகா எல்லாம் மகா அவசியமும் அல்ல, அது இந்தி திணிப்பினை போன்ற ஒரு வலுகட்டாய திணிப்பு
நிச்சயம் மோடியும் எங்காவது யோகாசனங்கள் செய்வார்.
மோடி வித்தியாசமனாவர் இங்கு யோகா என்றாலும் பங்கெடுப்பார், ஜப்பானில் ஜாலியாக டிரம் அடிப்பார், மலைவாழ் மக்களோடு அவர்கள் கலாச்சார ஆடையில் போஸ் கொடுப்பார்.
ஒரு பிரதமருக்கான பணி இதுதான் என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை
ஒருவேளை விரைவில பரதநாட்டியத்தை இத்தேசம் பிரபலபடுத்தி, பாபா ராம்தேவ் போல இன்னொருவர் பரத குரு என வந்து, பரதநாட்டியம் , குச்சுபிடி போன்ற இந்திய பாரம்பரிய நடனங்களை பிரபலபடுவது நடக்கலாம்
இது இந்திய பாரம்பரியம் என சொல்லி அவர் மோடியினை அழைத்து விட்டால், மோடியும் மிக சந்தோஷமாகிவிட்டால் என்ன ஆகும்??
ஆர்வமாக யோகாவில் பங்கேற்கும் மோடி, பரதநாட்டியம் என்றால் மட்டும் சலங்கை கட்டி போகமாட்டாரா?
அப்படி சென்றுவிட்டால் ஐஸ்வர்யா தனுஷுக்கும், பவர் ஸ்டாருக்கும் ஒரு போட்டியாளர் உருவாகிவிடும் ஆபத்து உண்டு.
நாட்டுக்கு ஆரோக்கியமான குடிமக்கள் நிச்சயம் வேண்டும் அதற்கு நச்சு உணவு கட்டுப்பாடு , குடி கட்டுப்பாடு போன்றவற்றை செய்ய வேண்டும்
பள்ளிகளிலே அனுதினமும் விளையாடும் வழக்கத்தை உருவாக்க வேண்டும், அது கட்டாயமாக்கபட வேண்டும்
அது தொடர்ந்துவர விளையாட்டு பூங்கா உட்பட பல அமைக்கபட்டு அது நல்லமுறையில் பராமரிக்க பட வேண்டும்
அதுதான் சாலசிறந்ததே அன்றி சும்மா யோகா நாள் என சொல்வதெல்லாம் வெற்று விளம்பரமன்றி வேறு அல்ல
யோகாவிற்கான நாள் எது? எந்த முனிவர் இந்த நாளில் யோகாவினை கொண்டாட சொன்னார்? சாஸ்திரங்களும் புராணங்களும் வானியல் கோள்களும் இந்நாளை சொன்னதா என்றால் பதில் தரமாட்டார்கள்
மாறாக இதே நாளில் யோகா தினமாக கொண்டாட காரணம் என்னவென்றால் அது ஆர்.எஸ்.எஸ் பிதாமகனின் நினைவுநாள்
இந்நாளில்தான் ஹேட்கேவர் காலமானார், முதலில் காங்கிரஸ்காரராகவும் பின் இந்து மதத்தையும் கலாச்சாரத்தையும் காப்பாற்ற கிளம்பிய அந்த ஹேட்கோவர்தான் ஆர்.எஸ்.எஸஐ 1925ல் நிறுவினார்