அது ஒரு யோகாசன காலம்
முன்னொரு காலத்தில் தமிழகத்தில் அனுதினமும் யோகா நடந்துகொண்டிருந்தது
அது ஒரு யோகாசன காலம்
தமிழக “யோககலை ஞானி” பன்னீர்செல்வத்தை அழைக்காமல் வடக்கே என்ன யோகா விழா கொண்டாடுகின்றார்களோ?
பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்களின் யோகாவினை விடவா பாபா ராம்தேவின் யோகா சிறந்தது?
எத்தனை விதமான ஆசனங்கள் பன்னீருக்கு தெரியும் தெரியுமா? பாபா ராம்தேவுக்கு அதில் கால்வாசி கூட தெரியாது.
தமிழக அமைச்சரவையினையே “யோகா பள்ளி”யாக வைத்திருந்த ஜெயலலிதாவுக்குமா ஒரு அஞ்சலி இல்லை?
கட்சி மேடை, வீட்டு வாசல் என எல்லாவற்றையும் யோக சாலையாக வைத்திருந்தார் அவர்
அட அவரின் ஹெலிகாப்டரும், காரும் கார் டயரும் கூட யோகா கற்று கொடுதது
அவரின் செருப்பு அதைவிட அழகாக யோகா சொல்லிகொடுத்தது
ஆயினும் அவரை நினைத்துபார்ப்பார் யாருமில்லை..
தமிழன் என்றாலே வடக்கத்தியர்களுக்கு இளக்காரமாக போய்விட்டது.
அதிமுகவின் இரண்டாம் யோக குருவனான சசிகலாவினையும் உள்ளே அடைத்துவிட்டார்கள் இல்லையெனில் இந்நேரம் மாபெரும் யோகாசனங்கள் எல்லாம் நடந்துகொண்டிருக்கும்
எவ்வளவு பெரிய யோகாசன கட்சியினையே நடத்தினார் ஜெயலலிதா, அவரை கொஞ்சமாவது பாஜக நினைத்து பார்க்கின்றதா?
நன்றிகெட்ட உலகமடா மனிதா.