கேவி மகாதேவன்
தமிழ் சினிமாவில் அவர் தவிர்க்கமுடியா இசை அமைப்பாளர், நிச்சயம் அவரே இன்றைய தமிழ் இசையின் அடிக்கல்
அவரின் பாதிப்பில் இருந்தே விஸ்வநாதனும், இளையராஜாவும் இன்னும் பலரும் வந்தார்கள்
அவரின் பாதிப்பில்லா இசை அமைப்பாளர்கள் இனி தமிழ்திரையுலகிற்கு வரமுடியாது
கேவி மகாதேவன்
அவர் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலை சேர்ந்தவர், பூதபாண்டியில்தான் அவர் இசைபயின்றார்
1940களிலே திரையுலகுக்கு வந்தவர்
படிக்காத மேதை, திருவிளையாடல் வசந்தமாளிகைஉட்பட ஏகபட்ட படங்களுக்கு இசை அமைத்தவர்
அந்த தில்லானா மோனமப்பாள் , மகாகவி காளிதாஸ் அவரின் கிளாசிக் வகை
பாகவதர் காலத்தில் இருந்து எஸ்பி ஜேசுதாஸ் காலம் வரை, சுசீலாவுக்கு முந்தைய கேபி சுந்தரம்பாள் காலம் முதல் சித்ரா காலம் வரை இசை அமைத்தவர்
எத்தனையோ பாடகர்களை அறிமுகபடுத்தியவர், எம்.எஸ் விஸ்வநாதன் அவரின் கண்டுபிடிப்பில் ஒருவர்
விஸ்வநாதனுக்கும் அவருக்கும் நல்ல உறவு இருந்தது, மகாதேவனை மனமார உயர்த்தியிருந்தார் விஸ்வநாதன்
கிட்டதட்ட 50 ஆண்டுகாலம் தமிழ் திரையுலகில் செங்கோல் செலுத்தினார் மகாதேவன்..
தமிழ் கன்னடம் மலையாளம் தெலுங்கு என எல்லா பக்கமும் சுற்றி வந்தவர் அவர்.
அவர் காட்டிய வழியில்தான் இன்று தமிழ் பாடல்கள் வருகின்றன, அவர் கட்டிய மாளிகையின் வடிவில்தான் பின்னாளைய இசைவடிவங்கள் எழும்பின
அந்த மாபெரும் இசை அமைப்பாளருக்கு இன்று நினைவுநாள்
நாகர்கோவிலின் கிருஷ்ணன் கோவிலும், பூதபாண்டி காற்றும் எந்நாளும் அவரின் நினைவோடு கலந்திருக்கும்
இன்று உலக இசை தினம் என்பது கூடுதல் தகவல்..