ஏனோ ஒரு மாதிரி பின்வாங்குகின்றது அந்த மழை
தென்மேற்கு பருவமழை இன்னும் தீவிரமடையவில்லை, நிச்சயம் தமிழ்நாட்டுக்கு அது பலனற்றது எனினும் மேற்கு தொடர்ச்சி மலையினை ஒட்டிய மாவட்டங்களும் குமரியும் அதனால் பலன் பெறும்
தஞ்சைக்கே அந்த மழை கன்னடத்தில் கொட்டினால்தான் நீர் வரும்..
தஞ்சை என்ன? இங்கு ஒவ்வொரு ஆறுக்கும் அம்மழைதான் மூலம்..
தமிழகத்தையும் ஆந்திராவினையும் தவிர மொத்த இந்தியாவும் தென்மேற்கு பருவமழையினை நம்பி வாழும் பகுதிகள்
அம்மழை கொட்டாவிட்டால் கங்கை பொங்காது, பொங்காத கங்கை நெருப்பில்லா அடுப்புக்கு சமம்
கிட்டதட்ட 10 மாநிலங்களும் வங்கதேசமும் பாதிக்கபடும்
அந்த மழை கொட்டினாலன்றி வட இந்தியா வறட்சியின் பிடியிலிருந்து மீளாது
ஏனோ ஒரு மாதிரி பின்வாங்குகின்றது அந்த மழை, அது விரைவில் தொடங்க பிரார்த்திப்போம்