இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி என்றுமே சரியில்லை
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி என்றுமே சரியில்லை, இதில் பங்கேற்ற யாரும் தனிதனியாக பேசினாலே தாங்காது, இவர்களை மொத்தமாக பேசவைத்தால் என்ன ஆகும்?
ஒரு சுவாரஸ்யமுமில்லை, செயற்கை தனம் நன்றாக தெரிகின்றது
இந்நிகழ்ச்சி சுவாரஸ்யமாக என்ன செய்யலாம்? துறைவாரியாக அனுப்பலாம்
இலக்கிய பிக்பாஸ் யார்? என இந்த ஜெயமோகன், மனுஷ்ய புத்திரன், சாரு நிவேதிதா, இன்னபிற அல்ட்ராசிட்டி 15 பேரை உள்ளே தள்ளினால் எப்படி இருக்கும்?
அரசியல் பிக்பாஸ் யார் தெரியுமா? என ஸ்டாலின், எடப்பாடி,தமிழிசை, சீமான், எச்.ராசா, திருமா, ராமதாஸ், கிருஷ்ணசாமி சில கம்யூனிஸ்டுகளை உள்ளே போட்டு அடைத்தால் விஷயம் அபப்டி பிய்த்துகொள்ளும்
சிறந்த கத்தல் பாஸ் யார் என சீமான், டி.ஆர், போன்ற போன்ற அல்ட்ராசிட்டிகளை அனுப்பலாம்
கிரிக்கெட் பிக்பாஸ் என அசாருதீன், கும்பே, கங்குலி, ஹோலி, சேவாக் , டோனி அனுப்பினால் பந்து மூலமே கேமரா உடைப்பார்கள்
இன்னும் சில இயக்குநர்களான பாலா, மிஷ்கின், ராம் , சிம்பு, போன்றோரை வைத்து நிகழ்ச்சி நடத்தினால் இன்னமும் பிய்த்துகொள்ளும்
இந்த வீரமணி, மதிமாறன், எச்.ராசா, நித்தியானந்தா, தினகரன், ஜக்கி வாசுதேவ், ஜகீர் நாயக், மதுரை ஆதீனம் போன்றோரை உள்ளே போட்டு பூட்டினால் உலகபிரசித்தி பெற்ற காமெடி ரெடி
இப்படி எல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும் வாய்ப்பெல்லாம் இருக்க, அனாமதேயங்களை எல்லாம் உள்ளே போட்டு உப்பு சப்பில்லாமல் நிகழ்ச்சி நடத்தினால் நன்றாகவா இருக்கின்றது
இந்த ஜெயா டிவிக்கு இப்பொழுது அட்டகாசமான வாய்ப்பு
தினகரன்,எடப்பாடி, பன்னீர், செங்கோட்டையன், வளர்மதி, தம்பிதுரை, கோகுல இந்திரா, சசிகலா புஷ்பா, ஜெய குமார், நாஞ்சில் சம்பத், கருணாஅஸ் எல்லாரையும் உள்ளே அடைத்து பிக் லேடி பாஸ் உங்களை பெங்களூரிலிருந்து கவன்க்கின்றார் என ஒரு நிகழ்ச்சி நடத்தினால் எப்படி இருக்கும்?
எந்த ஒரு டிவியும் அந்த டி.ஆர்பி ரேட்டினை நெருங்க முடியும்?
ஒருவேளை நமக்கு தெரியாமல் அந்த “பிக் லேடி பாஸ்” அப்படி ஒரு நிகழ்ச்சியினை நடத்திகொண்டிருக்கின்றாரோ என்னமோ?