ஆனால் யோசிப்பார்களா என்பதுதான் விஷயம்
யாகங்களும் பிரார்த்தனைகளும் தேவைதான் ஆனால் கூடவே விஞ்ஞானத்தையும் பின்பற்றுவது தவறல்ல
தமிழகத்தில் வறட்சி நிலவுகின்றது, ஆனால் மேகங்கள் கூடுகின்றன சில இடங்களில் லேசாக பெய்கின்றது சில இடத்தில் அதுவுமில்லை
டோனி மைதானத்தில் சும்மா நிற்பது போல் நிற்கின்றது
மேகங்கள் இல்லா இடத்தில் ஒன்றும் செய்யமுடியாது, ஆனால் மேகங்கள் கூடிவிட்டால் வேதியல் பொடிகளை விமானம் மூல தூவி செயற்கை மழை பெய்ய வைக்கலாம்
முடியுமா என்றால் நிச்சயம் முடியும்
ஆனால் அரசு ஏனோ அதை பரிசீலிக்கவில்லை அவர்கள் அணுகுமுறை எல்லாம் வேறுமாதிரியாக இருக்கின்றது
மேகம் கூடிவிட்டால் அவற்றை மழையாக மாற்ற விஞ்ஞான உதவிகளை நாடுவது ஒன்றும் தவறல்ல, இயற்கைக்கு எதிரானதும் அல்ல
அரசு அதுபற்றி யோசித்தால் மிகவும் நல்லது
ஆனால் யோசிப்பார்களா என்பதுதான் விஷயம்