கலைஞர் செய்த மிக முக்கியமான நல்ல விஷயம்
கலைஞர் செய்த மிக முக்கியமான நல்ல விஷயம் பல உண்டென்றாலும் அவரின் மிக சிறந்த நடவடிக்கை என்பது மாவட்டங்களின் பெயர்களிலிருந்தும், போக்குவரத்து கழகங்கள் பெயரிலும் இருந்த தலைவர்கள் பெயரை நீக்கியது
முதலில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது, சிக்கல் 1990க்கு பின் சாதிய சங்கங்களும் கட்சிகளும் அழிச்சாட்டியம் செய்ய ஆரம்பித்தபின் வந்தது
பெரும் தலைவர்கள் சாதிய அடையாளமாக பார்க்கபட்டு, சாதி தலைவர்கள் பெயரில் மாவட்டம் வேண்டும், போக்குவரத்து கழகம் வேண்டும் என கோரிக்கை வலுத்தது
அது போராட்டமுமானது
யோசித்த கலைஞர் அந்த அதிரடி முடிவினை அறிவித்தார், குமரி நேசமணி முதல் காஞ்சி அண்ணா மாவட்டம் வரை தலைவர்கள் பெயர் நீக்கபட்டது
நேசமணி போக்குவரத்து கழகத்தில் இருந்து திருவள்ளுவர் போக்குவரத்து கழகம் வரை பெயர் நீக்கபட்டது
ஜெயலலிதா பெயரிலும் அரசுபோக்குவரத்து கழகம் இருந்தது அதுவும் போனது
கலைஞர் பெரிதும் மதித்த வள்ளுவன், அண்ணா, மூவேந்தர், பல்லவர், கட்டபொம்மன் என பலர் பெயர் நீக்கபட்டது அவருக்கு வருத்தமே
ஆனால் வேறுவழியில்லை, தமிழகத்து அமைதி முக்கியம் என அந்த கடின முடிவினை எடுத்தார்
இதனால் பெரும் நிம்மதி இங்கு கைகூடிற்று, அதில் கலைஞர் வாழ்த்துகுரியவர்
இன்று தலைவர்கள் பெயரில் மாவட்டமும் போக்குவரத்து கழகமும் அமைக்கும் சம்பிரதாயம் தொடர்ந்திருந்தால் காடுவெட்டி வெட்டி குரு மாவட்டம், குரு போக்குவரத்து கழகம் என கிளம்பியிருக்கலாமோ என ராமதாஸ் யோசித்திருக்கலாம்
அவரின் சமீபத்திய எரிச்சலுக்கு அதுவும் காரணமாக இருக்கலாம்