சிக்கல் தீர்ந்துவிடும்
அவன் கருப்பனாக இருக்கட்டும், ஆப்ரிக்க வம்சமாக இருக்கட்டும்
ஆனால் மனிதன், எல்லோரையும் போன்ற மனிதன். அவன் சுதா ரகுநாதனின் மகளை திருமணம் செய்வதில் யாருக்கு என்ன சிக்கல் என்றுதான் தெரியவில்லை
சுதா ரகுநாதன் பத்ம விருது வாங்கியவராம், இந்த மும்மூர்த்திகள் எனப்படும் திருவையாறு கோஷ்டியில் தலமை பாடகியாம்
மகளின் திருமணத்தை அங்கீகரித்தார் என்பதற்காக அவர் பத்ம விருதை திருப்பி கொடுக்க வேண்டுமாம், திருவையாறு சந்நிதியில் பாட கூடாதாம்.
நவீன தீண்டாமை என்பது இதுதான். அவன் இந்துமதம் தழுவுகின்றான் என சொல்லியும் நம்மோடு அவனை சேர்க்கமுடியாது என சிலர் விரட்டியடிப்பதும் நவீன தீண்டாமை மற்றும் காட்டுமிராண்டித்தனம்
இது நிச்சயம் சரியல்ல
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என வாழ்பவர் தமிழர், அதில் ஏதோ அந்த திருவையாறு சமாதி தனிபட்ட இனத்துக்கு சொந்தம் என குதிப்பது சரியல்ல
அது தமிழர் இசை, அங்கு ஒன்றையும் அந்த மும்மூர்த்திகள் புதிதாக கிழிக்கவில்லை
இங்கு அவர்கள் காலத்துக்கு முன்பே சங்க பாடல்களும் குறளும் கம்பராமாயணமும் அந்த ஸ்வரங்கள் ராகங்களுக்குள் அடங்குமாறே அமைக்கபட்டிருந்தது
இந்த மும்மூர்த்தி இம்சைகள் தெலுங்கில் பாடியதை தவிர் ஒரு புல்லும் புடுங்கவில்லை
சக மனிதனை தன்னில் ஒருவராக இணைப்பதே மானிட தர்மம், அதை மீறிய எந்த தர்மமும் மனித தன்மை அல்ல
இந்த சுதா ரங்கநாதனை விரட்டும் கோஷ்டிகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இந்துதர்மம் என்பது எல்லோரையும் அரவணைப்பது, இவர்கள் செய்வது நவீன தீண்டாமை மற்றும் அப்டேட்டட் பார்ப்பனியம்
முதலில் இந்த திருவையாறு இம்சையினை அரசு கட்டுபாட்டில் எடுத்து அது பொதுவான இசைகூடம், குறிப்பிட்ட சாதிக்கானது அல்ல என அறிவித்தாலே பாதி சிக்கல் தீர்ந்துவிடும்