மைக் பாம்பியோ இன்று இந்தியா வருகின்றார்
அமெரிக்காவின் இரண்டாம் சர்வ சக்தி படைத்த நபரான மைக் பாம்பியோ இன்று இந்தியா வருகின்றார்.
ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 வாங்க கூடாது வாங்கினால் எப் 21 ரக விமானத்தை தரமாட்டோம் . ஈரானிடம் இருந்து ஒரு ஸ்பூன் எண்ணெய் கூட வாங்க கூடாது என அமெரிக்கா மிரட்டி கொண்டிருக்கும் நிலையில் மைக் பாம்பியோவின் வருகை பெரிதும் எதிர்ப்பார்க்கபடுகின்றது
மனிதர் முன்னாள் சி.ஐ.ஏ தலைவர். பெரும் ரகசியங்களின் கருவூலம். பெரும் பிரபலங்களின் ரகசியங்களை, நாடு, ராணுவ ரகசியங்கள் அறிந்து அதில் குறிபார்த்து அடிப்பதில் பெரும் வித்தகர் இவர்
மோடியிடம் எதை காட்டி பயமுறுத்த போகின்றாரோ?
இதை பற்றி சங்கிகளிடம் கேட்டால், மைக் பாம்பியோவின் ரகசியமே மோடி கையில்தான் இருக்கும், அவர் வாய் திறக்கும் முன்பே பாம்பியோவின் ரகசியத்தை காட்டி மிரட்டி அவரை ஓட அடித்துவிடுவார் மோடி என மிக நம்பிக்கையாய் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்