அந்த அணையினை தமிழகமே கட்டி பராமரிக்கட்டும்
மேகதாது அணைக்கு கடும் எதிர்பினை தமிழகம் கொடுக்கின்றது, பல முறை காவேரியில் பாதிக்கபட்ட மாநிலம் இன்றும் பாதிக்கபடும் மாநிலம் என்ற வகையில் தமிழக நிலைப்பாடு சரியானது
ஆனால் கன்னடமோ நாங்கள் மின்சாரம் தயாரிக்க வேண்டும், இன்னும் சில காரியங்களுக்காக நீரை தேக்குவோமே அன்றி நிச்சயம் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யமாட்டோம் என சொன்னதையே சொல்கின்றது
ஒரு இந்தியனாக சொல்வதென்றால் காவேரியில் வெள்ளம் வரும்பொழுது கடலில் கலந்த நீரின் அளவு எல்லோருக்கும் தெரியும்
அதனால் கூடுதலாக ஒரு அணை கட்டுவது ஒன்றும் தவறல்ல, நிச்சயம் கட்டலாம், இந்த நாட்டில் ஒரு அணை கூடுகின்றது நல்லது
ஆனால் அந்த அணை தமிழக நிர்வாகத்தின் கீழ் வரட்டும், அதன் சகல முடிவுகளையும் தமிழகமே எடுக்கட்டும்
அதில் மின்சாரம் எடுப்பதோ இல்லை நெய் எடுப்பதோ எடுக்கட்டும், பரிசல் விட்டு விளையாடட்டும் ஆனால் அணையின் திறவுகோலும் இதர நிர்வாகமும் தமிழத்தின் கையில் இருக்கட்டும்
அப்படி ஒரு ஒப்பந்தபடி அந்த அணையினை தமிழகமே கட்டி பராமரிக்கட்டும்
அதற்கு முடியாது என கன்னடம் சொன்னால், (நிச்சயம் அதனைத்தான் சொல்வார்கள்) அணை கட்டாமலே போகட்டும்