இன்றைய உலகில் “பிக் பாஸ்..”

வரவர அமெரிக்காவின் பொருளாதார தடைகளை உலகம் கண்டு கொள்வதாக தெரியவில்லை

“அவனுக்கு வேலையே அதுதான், அதை எல்லாம் பார்த்தால் வாழமுடியுமா? ஆனாலும் அவனை இனி மதிக்க கூடாது” என பல நாடுகள் கிளம்பிவிட்டன.

ஈரான் அதில் முரட்டு நாடு. அதுவும் ரஷ்யாவும் கை கோர்க்கின்றன‌

“உனக்கு நான் ஆயுதம் தருவேன், நீ எண்ணெய் வியாபாரத்தை எனக்கு போட்டியாக யாரும் வராத அளவு நடத்திகொள்ளவேண்டும், அமெரிக்கா கிடக்கின்றது விடு..” என்ற அளவில் ரஷ்யாவுக்கும் ஈரானுக்குமான உறவு அமைந்துவிட்டது.

கிழக்கே வடகொரியாவினை பார்த்து சீனா “டோன்ட் வொர்ரி, அண்ணன் இருக்கும்பொழுது தம்பி அழகூடாது, இணைந்த கைகள் நாமானால் இனி இருக்காது அமெரிக்கா” என தட்டி கொடுக்கின்றது

ஆம் அமெரிக்க தடைகளை மீறி சீனாவும் வடகொரியாவும் பகிரங்கமாக கை கோர்க்கின்றன‌

இவை எல்லாம் புட்டீனின் ஆசீர்வாதம் என்கின்றது உலக செய்தி

சிரிய அதிபர், வடகொரிய அதிபர், துருக்கி அதிபர், வெனிசுலா பிரதமர் என பலநாட்டு அதிபர்கள் புட்டீனால் மட்டுமே தொடர்ந்து பதவியில் இருக்கின்றனர்

இன்றைய உலகில் “பிக் பாஸ்..” அவர்தான்,

அவர் ஒருவர்தான்

அவர் பேச கூட மாட்டார், ஆனால் உலகம் அவரைபற்றி பேசிகொண்டே இருக்கும்