இவை எல்லாம் நாட்டுக்கு நல்ல அறிகுறி அல்ல‌

வடக்கே இஸ்லாமியருக்கு எதிரான சில வன்முறைகள் தொடங்கிவிட்டதாக தெரிகின்றது

ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடன் இஸ்லாமிய மதராசாக்களை நோக்கி சில விரும்பதகாத சம்பவங்கள் நடப்பதாக பல செய்திகள் தெரிவிக்கின்றன‌

இவை எல்லாம் நாட்டுக்கு நல்ல அறிகுறி அல்ல‌

ஆச்சரியமாக எதிர்கட்சிகளான முலாயம் சிங், மாயாவதி ராகுல் என யாரும் இதை எல்லாம் கண்டிக்கவில்லை என்பதுதான் மகா சோகம்

இவைகளை ஆரம்பத்திலே கிள்ளிவிடுவது நல்லது, இன்னொரு பெரும் சிக்கலில் நாடு வீழ்ந்தால் பாகிஸ்தான் போல இந்தியா நிலையும் பாதாளத்தில் வீழும்

அவர்கள் நிச்சயம் மதவெறியால் அழிந்தார்கள், நாம் சகோதரத்துவத்தால் வாழ்ந்து வருகின்றோம்

அது நீடிக்கா பட்சத்தில் இந்நாடு பெரும் சிக்கலை எதிர்கொள்ளும் அதை தடுக்கும் பொறுப்பு அரசுக்கு நிச்சயம் உண்டு