விழித்துவிட்டார்கள் என்பது தெரிகின்றது
சவுதி அரேபியா புதிய திட்டத்தை அறிவித்திருப்பது உலக அரங்கில் சலசலப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது
மற்ற நாடுகளை போல் அல்லாமல் எண்ணெய் ஆசியில் ஒரே இரவில் பணக்கார நாடு எனும் அந்தஸ்தை எட்டியது சவுதி
உலகின் மிகபெரும் எண்ணெய் வளநாடு என்ற போதிலும் பணக்கார நிலையினை தக்கவைக்க அதற்கு இன்னும் வலுவான நிதி தேவை
பல வகைகளில் அது தன் வருமானத்தை அதிகரித்தது, குறிப்பாக அந்நிய நாட்டு தொழிலாளர்களையும் தொழிலதிபர்களையும் அது குறிவைத்தது
நேற்று அந்நிய நாட்டவர் 1.5 கோடி செலுத்தினால் குடியுரிமை ரெடி என அறிவித்துவிட்டது
முன்பெல்லாம் இதில் கவனமாக இருந்தார்கள், வருமானவரி வெட்டினால் கூட பின்னாளில் குடியுரிமை சிக்கல் வரும் என கவனமாக தவிர்த்தார்கள்
ஆனால் இப்பொழுது மாறிவிட்டார்கள், பல தேவைகளும் மனித வள அவசியமும் அவர்களை இப்படி இழுக்கின்றன
இது சாத்தியமாகுமா?
ஆம் இருவழிகள் உண்டு
நிச்சயம் அந்நிய நாட்டினர் யாரும் ஓய்வெடுக்கவோ இல்லை கல்வி வகைக்கோ அங்கு குடியேற போவதில்லை சவுதி ஒன்றும் சுவிஸ் அல்ல
வாழ்வினை கொண்டாட விரும்பும் யாரும் அங்கு குடியேற விரும்பமாட்டார்கள்..
அதன் சட்டதிட்டமும், புவியியல் தன்மையும் இன்னபிறவும் அப்படியானவை
நிச்சயம் தொழில் ஒன்றினை தவிர யாரும் அங்கு செல்ல போவதில்லை
மாறாக குடியேற விரும்புவர்கள் தொழில் செய்யும் நோக்கில் மட்டுமே வருவார்கள் அல்லது தீவிர இஸ்லாமியராக இருப்பார்கள் என்பதால் துணிந்து சவால் எடுக்கின்றது சவுதி அரசு
ஒரு விஷயம் கவனித்தீர்களா?
முன்பெல்லாம் சவுதி சம்பாதிக்கும் பணத்தை ஒரு பைசா செலவில்லாமல் சொந்த நாட்டுக்கு கொண்டுவரும் தேசமாயிருந்தது
இப்பொழுது எங்கள் நாட்டில் சம்பாதிக்கும் பணம் எங்கள் நாட்டிலே சுற்றட்டும் என அந்நிய நாட்டினரின் பாக்கெட்டில் வை வைக்கின்றது சவுதி
விழித்துவிட்டார்கள் என்பது தெரிகின்றது.
ஆம் அவர்களின் ஒவ்வொரு அசைவும் இப்பொழுதெல்லாம் அப்படித்தான் இருக்கின்றன