அரசியல் ஞானம் என்பது அதுதான்
தங்க தமிழ்செல்வனுக்கும் டிடிவி தினகரனுக்குமான மோதல் பட்டவர்த்தனமாக தெரிந்தாயிற்று
இனி என்னாகும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை
எல்லா பலங்களும் விழ்ந்து நின்ற துரியோதணன் நிலையில் தனியாக நிற்கின்றார் டிடிவி தினகரன்.
ஒரு 5 வருடத்திற்கு முன்னால் கூட தங்களுக்கு இப்படி ஒரு நிலை வரும் என சசிகலாவோ, தினகரனோ எதிர்பார்த்திருக்க முடியாது
நன்றி என்பதும், விசுவாசம் என்பதும் கொஞ்சமும் எதிர்பார்க்கமுடியாத இடம் அரசியல்
யார் எப்பொழுது முதுகில் குத்துவார்கள் என்பது தெரியாது, அன்றிலிருந்து அதாவது ஜூலியஸ் சீசர் காலத்தில் இருந்தே அப்படித்தான்
கூட்டி கழித்து பாருங்கள் கலைஞர் அக்கட்சிக்கு மிக சரியான வழியினை காட்டிவிட்டு சென்றிருப்பது புரியும்
அரசியல் ஞானம் என்பது அதுதான்