இன்றைய துளிகள் 25/06/2019(1)
நடிகர் சங்க தேர்தலில் மோடி தலையீடு இருக்கலாம், வாக்குபெட்டியில் முறைகேடு செய்ய ஏற்பாடு எனமன்சூர் அலிகான் சந்தேகம்
சந்தேகம் எங்கெல்லாம் செல்கின்றது பார்த்தீர்களா?
சும்மாவே கள் குடித்த குரங்குக்கு கஞ்சா கொடுத்தால் என்னாகும்?
ஏற்கனவே அரைகிறுக்கனான மன்சூர் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்தபின் இப்படி உளறாவிட்டால்தான் ஆச்சரியம்..
அதிமுக அரசை ஊழல் அரசு என விமர்சித்த தயாநிதி மாறன்: கண்டனம் தெரிவித்த பாஜக எம்.பி
அதிமுகவினரை விமர்சித்தால் பாஜக எம்பிக்கள் ஏன் கொதிக்கின்றார்கள்?
அங்கு அடித்தால் இங்கு ஏன் வலிக்கின்றது?
ஆனால் பாஜக அரசை விமர்சித்தால் தற்போதைய அதிமுகவினரிடமிருந்து ஒரு எதிர்ப்பும் வராது, வரவே வராது.
சிங்கப்பூர் சென்றதற்கு பதிலாக மு.க.ஸ்டாலின் பெங்களூர் சென்று தண்ணீர் கேட்டிருக்கலாம்- தமிழிசை
அக்கோவ், ஏன் எல்லாம் அவர்தான் கேட்க வேண்டுமா?
பழனிச்சாமியும் மோடியும் மிக்சர் சாப்பிடுவதற்கா பதவியில் இருக்கின்றார்கள்?
உங்களுக்கெல்லாம் டெப்பாசிட் மிஞ்சியதே அதிகம் அக்கோவ்..
தினதந்தியினை படிக்காதீர்கள் பெரும் மடையர்களாக அது உங்களை மாற்றிவிடும், அது தமிழக சாபம் என தலையில் அடித்து கெஞ்சுகின்றோம் என்றால் இதற்காகத்தான்
