மாபெரும் தலைகுனிவு இது

ராமயணத்தில் ஒரு காட்சி உண்டு

ஓய்வில் மரத்தடியில் அமர்கின்றான் ராமன், வீரனின் அம்பு சாய்த்து வைக்கபட கூடாது என்பது அரச தர்மம்

அந்த அம்பினை ஓங்கி மண்ணில் குத்திவைத்துவிட்டு உறங்கிவிடுகின்றான், எழும்பும் பொழுது அம்பை உருவினால் அதில் ஒரு தேரை குத்தபட்டிருந்தது

பதறிய ராமன், “ஏ தேரையே குத்தபட்டவுடன் ஏன் கத்தவில்லை, உன்னை அப்பொழுதே காப்பாற்றியிருப்பேனே..” என கேட்கின்றான்

தேரை சொன்னது

“எல்லோரும் எங்களை அடித்தால் ஸ்ரீராமா… என உன்னை அழைப்போம், நீயே குத்தினால் நாங்கள் யாரை அழைப்போம்?..”

தலைகுனிந்து நின்றான் ராமன்

அப்படியாக ஏதும் பெரும் துன்பம் என்றால் அவன் பெயர் சொல்லி அழைக்கலாம், ஆனால் அவன் பெயராலே ஒருவனை சாகும் வரை அடித்தால் யாரை அழைப்பது?

இந்து தர்மம் என்பது இது அல்ல, மாபெரும் தலைகுனிவு இது

தங்களை பூரண இந்துக்களாக கருதும் யாரும் இதை செய்யமாட்டார்கள், செய்தவர்கள் நல்ல இந்துக்களாக இருக்க முடியாது.

மிக கடும் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை தண்டித்துவிட்டு மேற்கொண்டு இது போன்ற கொடுமை நடக்காமல் காக்கும் கடப்பாடு அரசுக்கு உண்டு

இல்லாவிட்டால் நாடு நாடாய் இராது, வாலியின் ஆட்சியில் நடந்த காட்டுமிராண்டி ஆட்சியாகவே இருக்கும்

இந்த கொடுமையெல்லாம் அந்த ஸ்ரீராமன்விரும்பமாட்டான், அப்படிபட்டவர்களை பக்தர்கள் என அவன் ஏற்றுகொள்ளவு மாட்டான்..

அந்த புனிதமானவன் பெயரால் இவர்கள் செய்யும் கொடுமைக்கு அவன் தண்டனை கொடுத்தே தீருவான்