எம்.பி பதவி லட்சியம், எம்.எல்.ஏ பதவி நிச்சயம்

ஏன் நீ திமுகவினை திடீரென திட்ட தொடங்கியிருகின்றாய் என பலர் கேட்டால் விஷயம் இதுதான்.

அகட்சியில் விசுவாசமான‌ தொண்டராக இருந்தால் அப்படியேத்தான் போஸ்டர் ஒட்ட வேண்டும் இல்லை கலைஞர் வீட்டு வம்சாவழிக்கு அடிமை சாசனம் எழுதி கொடுக்க வேண்டும்

எழுதி அல்லது பேசிதள்ளி கொண்டே இருக்க வேண்டும், தம்பிடிக்கு பிரயோசனம் இருக்காது.

அதையும் மீறினால் தா.கிருட்டினன் போல கொல்லபடும் ஆபத்தும் உண்டு, மீறி பினாமி ஆனால் சாதிக்பாட்சா நினைவும் வரும்

பதவி ஏதும் வேண்டுமென்றால் என் தாத்தா அன்றே திமுகவில் சேர்ந்து இந்தி எதிர்ப்பு, தொந்தி வளர்ப்பு என களமிறங்கியிருக்க வேண்டும், அந்த சண்டாளன் அதையும் செய்யவில்லை

திமுகவில் இருந்தால் ஒரு மண்ணும் தொண்டனுக்கு கிடைக்காது, அங்கு பதவிபெறும் தந்திரமே வேறு

அதாவது திமுகவினை சகட்டு மேனிக்கு திட்ட வேண்டும், மகா மட்டமாக போட்டு தாக்க வேண்டும். உலகின் மொத்த பிரச்சினைக்கும்,ஏன் சுனாமி வந்ததற்கும் திமுகவே காரணம் என சொல்ல வேண்டும்

பிரேசிலில் ஒருவன் குடித்து செத்தாலும் திமுக காரணம் , அண்டார்டிக்கா பென்குயின் செத்தாலும் திமுக காரணம், சிரியபோரை திமுக நிறுத்தவில்லை என்றெல்லாம் கத்த வேண்டும்

எவ்வளவு அவமானமாக கலைஞரை திமுகவினை திட்டமுடியுமோ அவ்வளவு திட்ட வேண்டும்

பின் ஒரு சுபநாளில் அறிவாலயத்தை அடைந்து ஸ்டாலினை சந்தித்தால் போதும்

இன்னும் கொஞ்சம் திராவிடம், சமூக நீதி என என்னவெல்லாமோ பேசினால் கூடுதல் தகுதி.

உடனே சகல சம்பத்தும் கிடைக்கும், சமயங்களில் மேல்சபை எம்பி பதவி , எம்.எல்.ஏ பதவி என என்னவெல்லாமோ கிடைக்கும்

இந்த ராஜதந்திரத்தில் ஊறித்தான் திமுகவினை திட்டிகொண்டிருக்கின்றோம்..

எம்.பி பதவி லட்சியம், எம்.எல்.ஏ பதவி நிச்சயம்