முன்னாள் நிதியமைச்சருமான சிதம்பரமும் இந்நாள் நிதியமைச்சரான நிர்மலாவும்

பாராளுமன்றத்தில் முன்னாள் நிதியமைச்சருமான சிதம்பரமும் இந்நாள் நிதியமைச்சரான நிர்மலாவும் விவாதிக்கும் காட்சிகள் அருமையானவை

இருவருமே திறமையானவர்கள், அதிலும் ப.சிதம்பரத்தின் கேள்விகள் கடுமையானவை, நிர்மலா அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும் திறமையாக சமாளிக்கின்றார்

இருவருமே தமிழர்கள், இங்குதான் கல்வி தொடங்கினார்கள் லண்டனில் முடித்தார்கள்

பாராளுமன்றத்தில் இரு தமிழர்கள் இப்படி பெரும் பிம்பமாக உருவாகியிருப்பது வாழ்த்துகுரியது

கவனியுங்கள்

இந்த தமிழர்களை பெரும் அடையாளங்களாக உயர்த்தியது யார்?

நிச்சயம் தேசிய கட்சி

ஒருவேளை இருவரும் திமுகவில் இருந்திருந்தால் என்னாயிருக்கும்?

சிதம்பரம் அன்பழகன் அருகில் நாற்காலி போட்டு அமர்ந்து “உதயநிதி உலகின் ஒப்பற்ற மேதை..” என சொல்லிகொண்டிருப்பார்

நிர்மலா கனிமொழி அருகே இருந்து சாமரம் வீசிகொண்டிருப்பார்

ஒருவேளை இருவரும் அதிமுகவில் இருந்தால்…… வேண்டாம் நினைக்கவே பயமாக இருக்கின்றது

தமிழர்கள் இந்நாட்டில் பெரும் அடையளமாக உருவாக தேசிய கட்சிகளே வழிவிடும் மாறாக மாநில ,திராவிட ,தலித்திய அமைப்புகள் ஒரு தமிழனையும் உருப்பட விடாது..