சில காரியங்கள் ஈரான் பெயரை சொல்லி யாரோ செய்கின்றார்கள்

தன் குருஷேத்திர பகுதியான ஹோர்ம்ஸ் ஜலசந்தி பகுதியில் பிரிட்டன் கப்பலுடன் ஈரான் வம்பு இழுத்ததாகவும் பிரிட்டன் அதை முறியடித்ததாகவும் செய்திகள் வந்தன‌

ஈரான் அதை மறுக்கின்றது, எங்களை வம்புக்கு இழுக்கும் முயற்சி இது, யாரோ எங்கள் பெயரை வைத்து போரை இழுக்கின்றார்கள். நாங்கள் அடிக்க ஆரம்பித்தால் இப்படியா அடிப்போம்? அடிக்கும் அடியில் கப்பலே இருக்காது என அசால்ட்டாக சொல்லிவிட்டது

நடக்கும் சம்பவங்களில் சிலவற்றில் ஈரானின் கரம் உண்டு, சில்வற்றில் பின்னணியில் ஈரான் உண்டு

ஆனால் சில காரியங்கள் ஈரான் பெயரை சொல்லி யாரோ செய்கின்றார்கள், அது யார் என தெரியவில்லை ஆனால் அவர்களுக்கு போர் உடனே தொடங்கவேண்டும் என்ற பேராசை இருப்பது மட்டும் புரிகின்றது