முதல் முறையாக கோப்பையினை தொட்டுபார்க்கும் துடிப்பில் இருக்கின்றார்கள்

ஆஸ்திரேலியாவினை ஆஷ் ஆக்கிவிட்டு தன்னை நிரூபித்து இறுதிசுற்றுக்கு சென்றுவிட்டது இங்கிலாந்து

இது அவர்களுக்கு இயான் போத்தம் போன்ற ஜாம்பவான்கள் இருந்த பொற்காலத்தினை போன்றது, இறுதிசுற்றுக்கு மிக தகுதியான அணி

நியூசிலாந்தும் மார்ட்டின் குரோவ், பாண்ட் போன்றோர் ஆதிக்கம் செலுத்திய காலத்தைபோல் வலுவான காலத்துக்கு வந்தாயிற்று

சுருக்கமாக சொன்னால் இங்கிலாந்து பலமுறை பைனலுக்கு வந்து கோப்பையினை தவறவிட்ட அணி

1970களில் இருந்து அப்படித்தான்

நியூசிலாந்து ஒருமுறை தவறவிட்ட அணி

இருவருமே முதல் முறையாக கோப்பையினை தொட்டுபார்க்கும் துடிப்பில் இருக்கின்றார்கள்

50/50 வாய்ப்பு இருக்கின்றது என சொல்லபட்டாலும், இங்கிலாந்துக்கு சற்று கூடுதலாக இருப்பதாகவே கருதபடுகின்றது