விவகாரம் இன்னும் பல ஆண்டுகளுக்கு இழுக்கலாம்
அடக்க முடியாத யானையினை பட்டினி போட்டு வழிக்கு கொண்டுவருவார்கள், மானிட இனம் ஆதியில் இருந்தே செய்யும் தந்திரம் அது
வீழ்த்தமுடியாத பலசாலியாக இருப்பவனை , அவனின் பலவீனம் பார்த்து அடிப்பது ஒரு வகை என்றால் அவனை பலமிழக்க வைத்து அடிப்பது இன்னொரு வகை
ஈரானில் அதைத்தான் அமெரிக்கா செய்ய துடிக்கின்றது, அதுவும் கடந்த 10 ஆண்டுகளாக ஏகபட்ட தடைகள்
எனினும் ஈரானை அவர்களால் முற்றிலும் அடக்க முடியவில்லை, அந்நாடும் வழிக்கு வருவதாக தெரியவில்லை
அமெரிக்கா முரண்டு பிடிக்க, ஈரானும் நாங்கள் செறிவூட்டபட்ட யுரேனிய அளவினை தடையினை மீறி அதிகரிப்போம் என மல்லுகட்டுகின்றது
அந்த வளைகுடா பகுதியில் எண்ணெய் கப்பல் மேலான தாக்குதலும் அடிக்கடி நடக்கின்றன
இவ்வளவு நடந்தும் டிரம்பானவரால் ஈரான் மேல் தாக்குதல் நடத்த முடியவில்லை, விஷயம் என்னெவென்றால் ஈரான் மேல் தாக்குதல் நடத்த உலகளாவிய ஆதரவினை திரட்டமுடியவில்லை
இந்த இடத்தில் அமெரிக்காவுக்கு உதவ வருகின்றது இஸ்ரேல், கடந்த வாரம் மொசாத் உளவாளிகளுக்கு பகிரங்க விருது அளித்து அவர் பேசியது சாதாரண விஷயம் அல்ல
கடந்தவாரம் நடந்த விருதளிப்பு விழாவில் ஈரானின் அணுசக்தி ரகசியங்களை மொசாத் கடத்தி வந்ததை ஒப்புகொண்ட அவர், அதன் நகல் அமெரிக்காவுக்கும் அனுப்பட்டது என தெரிவித்திருக்கின்றார்
இதனால் இனி நடக்க போகும் காட்சிகள் சில உண்டு
அதாவது ஈரான் பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பதாக அமெரிக்கா மறுபடி புலம்ப ஆரம்பித்து ஆதரவு திரட்டும்
அது போரில் முடியலாம்
இஸ்ரேல் இப்படி சொல்ல, ஈரானோ அது அவர்களே உருவாக்கி கொண்ட போலி ஆவணம் என சொல்லிவிட்டு அதன் போக்கில் இருக்கின்றது
உண்மையான நிலவரம் என்னவென்றால், ஈரான் அணுகுண்டை பெற்றுவிட்டது நிஜம், யுத்தம் என வந்தால் சவுதி, குவைத் குறிப்பாக இஸ்ரேல் மேல் வீசும் வாய்ப்பு பிரகாசமாக உண்டு
அப்படி தாக்கபட்டால் இந்நாடுகள் மீண்டெழ 50 வருடமாவது ஆகும்
இதனால் முழுக்க ஈரானை பட்டினி போட்டு வழிக்கு கொண்டு வரும் தந்திர நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றது அமெரிக்கா
ஆனால் அது பலனளிப்பது போல் தெரியவில்லை, விவகாரம் இன்னும் பல ஆண்டுகளுக்கு இழுக்கலாம்