உடல்நலம் சரியில்லை
இரு நாட்களாக சங்கத்துக்கு உடல்நலம் சரியில்லை , சளி காய்ச்சல் இன்னும் இந்த இரண்டும் என்ன சிக்கலை எல்லாம் இழுத்து வருமோ அதை எல்லாம் இழுத்துவந்துவிட்டது
உணவும் ருசியில்லை, தலையில் யாரோ ஏறி உட்கார்ந்தது போல் வலி, நுரையீரல் பக்கம் யாரோ அமர்ந்திருந்து தொண்டைகுழி, ஈரல் என எல்லாவற்றையும் பிடித்து பிடித்து இழுக்கின்றார்கள்.
இதற்கு ஆவி பிடித்தல், போத்தல் அடித்தல் என என்ன செய்தாலும் அது 7 நாள் கண்டிப்பாக இருந்தே தீரும் என பிரபல டாக்டர் ரஜினிகாந்த் சந்திரமுகியில் சொல்லிவிட்டார்
அதனால் வேறு வழியில்லை, அறை நண்பன் என்பவனிடம் ஏதாவது வாங்கிவா என்றாலும் உதயநிதி பற்றி பெருமையாக எழுதினால்தான் மாத்திரை வரும் இல்லாவிட்டால் எவன் மாத்திரை கொண்டு வந்தாலும் அனுமதி இல்லை என வாசலில் காவலே இருக்கின்றான்
அவனுக்கும் ஒரு நாள் காய்ச்சல் வரும், அப்பொழுது இருக்கின்றது என்பதால் சங்கம் கனத்த அமைதி..
கண்ணை திறந்தால் நீராக கொட்டுகின்றது, எதையுமே சரியாக பார்க்க முடியவில்லை
தலைவி குஷ்புவே வித்தியாசமாக தெரிகின்றார், அதை பார்க்க முடியாமல் சங்கம் கண்களை மூடிகொள்கின்றது..