தாய்லாந்தில் இனி மக்களாட்சி மலரபோகின்றதாம்
தாய்லாந்தில் இனி மக்களாட்சி மலரபோகின்றதாம், மலரட்டும்
கிழக்காசியாவின் விவசாய நாடு தாய்லாந்து, நிச்சயம் வளமான பூமி ஆனால் விவசாயம் மட்டுமா வாழவைக்கும்?
இன்னபிற தொழில்கள் இல்லாததால் போதையின் பாதைக்கு அது கொலம்பியா போல திரும்பும் ஆபத்து இருந்தது ஆனால் வியட்நாம் யுத்தமும் இன்னும் சில நிகழ்வுகளும் அதனை மாற்றின
சில பல காரியங்களை சேர்த்து சுற்றுலா நாடு என அது அறிவிக்கபட்டபின் அதன் முகம் மாறியது
இன்று உலகில் சுற்றுலா மூலம் சம்பாதிக்கும் நாடுகளில் அதுவும் ஒன்று, அழகிய காட்சிகள், சுவையான உணவுகள் அதை தொடர்ந்து இன்னும் என்னவெல்லாமோ கிடைக்கும் நாடு அது
மன்னரே பிரதானம் என்றாலும் அவர் மக்களின் மதிப்பை பெறுவதோடு சரி மீதி விஷயங்களை முடிவு செய்வதெல்லாம் ராணுவமே
அந்த ராணுவம் இப்பொழுது தாய்லாந்து மக்களாட்சிக்கு திரும்பும் நேரம் நெருங்கிவிட்டதாக அறிவிகின்றது
ஆக ராணுவ ஆட்சியிலே உல்லாசபுரியான தாய்லாந்து இனி மக்களாட்சியில் இன்னும் மகா உல்லாசபுரியாக மாறிவிடலாம்