தமிழிசை கோஷ்டிக்கு எல்லாம் பதில் சொல்லணுமா …
இந்த செல்போனை உடைக்கிறது, ஏதாவது பேசி சிக்கிறது எல்லாம் இப்போதான், இந்த 77 வயசுலத்தான்
ஆனா 17 வயசுல பழனிச்சாமி கவுண்டரா படம் வரைய சென்னைக்கு கிளம்புறப்போ அப்படி இல்ல, ரொம்ப பவ்யம், பணிவு, ஒரு வார்த்தை கூட யாரையும் காயபடுத்தமாட்டேன்
அந்த குணம்தான் என்ன நடிகனாக்கிச்சி, எனக்குண்ணு ஒரு ஒரு கவுரவத்தை கொடுத்திச்சு
ராமசந்திரன், கலைஞர், ஜெயலலிதான்னு எல்லோரும் என்ன மதிச்சாங்க. இப்போ வரைக்கும் ஜெயாவும் கலைஞரும் கலந்துகிட்ட ஒரே கல்யாணம் என் வீட்டு கல்யாணம்தான்
எம்ஜி ராமசந்திரனும் என்னை மதிச்சி நேசிச்சார், எம்.ஆர் ராதாவும் என்ன அவ்வளவு கொண்டாடுனார்.
ராமசந்திரன், கலைஞர், ஜெயா, எம்.ஆர் ராதா, என்னை பாசமா கவுண்ட பயலேன்னு அழைக்கும் சிவாஜிகணேசன்னு எல்லோருக்கும் பிடிச்சவனா இருந்த ஒரே நடிகன் நான் ஒருத்தன் தான், தமிழ் திரையுலக வரலாற்றிலே நான் ஒருத்தன் தான்..
ஏன்?
எல்லோருக்கும் நல்ல பிள்ளையா இருந்தேன்,எல்லா பெரியவங்களும் என்னை தன் வீட்டு பிள்ளையாகத்தான் பார்த்தாங்க
எதையும் பார்த்துட்டு புரட்சி, போராளித்துவம்னு கிளம்பல, அதெல்லாம் சும்மாண்ணு எனக்கே தெரியும்
நான் கட்சியில சிக்கல, அரசியல்ல சிக்கல, ஒரு வார்த்தையும் பேசி எங்கேயும் மாட்டால், சொல்லபோனா ரஜினிக்கே நான் தான் வழிகாட்டி.
என் கூட நடிச்சவங்க எல்லாம் அரசியல், அவமானம், குடி அது இதுன்னு பாதை மாறி போனப்போ நான் மட்டும் தனிச்சி நின்னேன் எப்படி?
அவ்வளவு கவுரவம் சேர்த்து வச்சிருந்தேன், இன்னைக்கும் தமிழ்திரையுலகமும் சரி, தமிழ்நாடு சரி எனக்குண்ணு ஒரு மரியாதை வச்சிருக்கு
ஆனா இந்த சூர்யா பய எல்லாத்தையும் சல்லி சல்லியா நொறுக்கிட்டானே, சல்லி சல்லியா நொறுக்கிட்டான்
அந்த வடக்கச்சி பொண்டாட்டி படம் ஓடணும்னு பப்ளிசிட்டிக்காக ஏதோ பேச போய் என்னமோ ஆயிட்டு
இனி சும்மா விடமாட்டாங்க போல
எவ்வளவு முதலமைச்சர் என்ன கவுரவமா பார்த்தாங்க, இனி பங்காளி எடப்பாடி அய்யா கூப்பிட்டுவிட்டா நான் குற்றவாளியா போய் நிற்கணுமா…..
பங்காளிய விடுங்க, இந்த தமிழிசை கோஷ்டிக்கு எல்லாம் பதில் சொல்லணுமா … கடவுளேளே ஏஏஏஏஏஏஏஏஏஏஏ”