இது என்ன நீதி?
நாங்கள் இந்தியினை எதிர்க்கவில்லை இந்தி திணிப்பினை எதிர்க்கின்றோம், விரும்பியவர்கள் வாய்ப்பு கிடைத்தால் இந்தி கற்பதில் எங்களுக்கு எதிர்ப்பு இல்லை
வாய்ப்பு எங்கே கிடைக்கும்?
எங்கே யார் சொல்லி கொடுப்பார்களோ அங்கே அவர்கள் படித்து கொள்ளட்டும்
அதைத்தானே, அரசு பள்ளிகளில் இந்தி என வாய்ப்பு கொடுக்கின்றோம்
முடியாது முடியாது அது இந்தி திணிப்பு, ஆனால் விரும்பியவர்கள் படிக்கட்டும்
எங்கே சென்று படிப்பார்கள்?
எங்காவது படிக்கட்டும்
அதை பள்ளியில் இலவசமாக படித்தால் என்ன?
முடியாது முடியாது
நீட் தேர்வினை ஏன் எதிர்க்கின்றீர்கள்?
அது எல்லா மாணவர்களுக்கும் சமமானது அல்ல, அரசு பள்ளிகளில் சிற்ப்பு நீட் தயாரிப்பு வகுப்புகள் வரும் வரை நீட் கூடாது
ஆக அரசுபள்ளிகளில் இலவச நீட் தேர்வு பயிற்சி வேண்டும்
ஆம் அதேதான், அதுதான் சமூக நீதி
அதே அரசு பள்ளியில் இலவச இந்தி கூடாது, எங்காவது காசு கொடுத்துத்தான் படிக்க வேண்டும்
ஆமாம் கூடவே கூடாது, அவர்களாக எங்காவது செலவழித்து படிக்கட்டும்
இது என்ன நீதி?
நாங்கள் சொல்லும் திராவிட நீதி”