மடியில் கனமில்லை எனின் வழியில் பயமெதற்கு?

NIA மசோதா திருத்தத்துக்கு ஏன் ஆளாளுக்கு அலறுகின்றார்கள் என்பதுதான் புரியவில்லை.

நாட்டின் பாதுகாப்புக்காக சில சட்டதிருத்தங்களை செய்கின்றோம், இது கூட செய்ய கூடாது என்றால் எப்படி?

NIA சட்டத்தை திருத்தியவுடன் போவோர் வருவோரை எல்லாம் உள்ளே பிடித்துபோட்டு சாத்தபோவதில்லை அப்படி செய்யவும் முடியாது.

ஒருவன் மீது பலத்த ஆதாரமும் இன்னும் ஏகபட்ட உளவுதகவல் உட்பட ஏராளமான உறுதிபடுத்தபட்டலும் நிகழ்ந்தபின்பே தூக்குவார்கள்

ஆக இப்பொழுது யாரெல்லாம் இந்த சட்டதிருத்ததை எதிர்க்கின்றானோ அவனெல்லாம் உள்ளூர ஏதோ ஆபத்தான வேலையினை செய்துகொண்டிருக்கின்றான் என பொருள்

மடியில் கனமில்லை எனின் வழியில் பயமெதற்கு?

இதில் திமுக எங்களுக்கு துரோகம் செய்துவிட்டது என ஆளூர் ஷாநவாஸ் போன்ற திருமாவின் அல்லக்கைகளும் கத்திகொண்டிருக்கின்றன‌

திருமாவே எதிர்த்து வாக்களிக்காமல் ஓடிவந்துவிட்டதை அன்னார் மறந்துவிட்டார்.

இன்னும் ஆழமாக தோண்டினால் இலங்கைக்கு போனது, சர்வதேச தீவிரவாதி பிரபாகரனுடன் விருந்து உண்டது போன்ற செய்திகளை எல்லாம் காட்டி தன்னை நொறுக்கிவிட மாட்டார்கள் என்ற பயம் திருமாவுக்கு இருக்காதா?

ஏன் 1998ல் கோவையில் இஸ்லாமியர் சிலர் தன் முதுகில் குத்திய வலி திமுகவுக்கு இருக்காதா?

அவர்களின் அரசியல் கணக்கு சரியாக இருந்திருக்கின்றது, இங்கு எங்கே நாமும் சிக்கிகொள்வோமோ என்ற பயத்தில் கத்துபவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கின்றது