மண்டேலா எனும் கருப்பு காந்தி
அது ஆப்ரிக்காவின் தெற்கு பகுதிநாடு, ஆனால் மிக மிக வளமான நாடு, வைரத்திற்கும் தங்கத்திற்கும் இன்னும் பல வகையான பொருளுக்கும் பெயர்பெற்ற நாடு, வளம் இருந்தால் அங்கு யார் இருப்பார்? வல்லரசு இருக்கும்
அப்படித்தான் பிரிட்டன் அன்றே பிடித்து வைத்திருந்தது, உலகெல்லாம் இருந்து தமிழர் உட்பட தொழிலாளர்களை குவித்து வைரம், தங்கம் என அள்ளி விற்றது, தென்னாப்ரிக்க சுரங்கங்கள் பிரிட்டனை வாழவைத்தது
அந்த குடியேறிகள் பலுகிபெருக அவர்களுக்கு நீதிமன்றங்களும் இருந்தன, சிங்கப்பூர் போலவே தென்னாப்ரிக்காவும் வழக்குரைஞர்களின் சொர்க்கமானது, ஏராளமான வழக்கறிஞர்கள் அங்கு சென்றனர், அவர்களில் ஒருவர்தான் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி
உலகெல்லாம் ஏற்பட்ட தொழிலாளர் எழுச்சி தென்னாபிரிக்காவினையும் தாக்கியது, கடும் எதிர்ப்புகள் வந்தன, கூடவே இனவெறி சர்ச்சையும் தலைவிரித்தாடியது
ஐரோப்பியருக்கு ஆசியரும் ஆப்ரிக்கரும் கருப்பர்களே, ஏன் குஷ்புவே ஆயினும் அவர்களுக்கு கருப்பினமே
அங்கு பல உரிமை போராட்டங்கள் எழுந்தன, தில்லையாடி வள்ளியம்மை எனும் தமிழ்சிறுமி உயிரிழந்ததும், தன்னை ரயிலில் இருந்து வெள்ளையன் விரட்டியதும் காந்தி என்ற போராளி உருவாக காரணம் ஆயிற்று
அதில் காந்தி வெற்றியும் பெற்றார், அந்த வெற்றி அவரை இந்தியாவிற்கு அழைத்தும் சென்றது
தென்னாப்ரிக்கா சுதந்திரம் பெற்றாலும் ஆட்சி வெள்ளையினமிடமே இருந்தது, கருப்பருக்கு ஒரு உரிமையும் இல்லை
பூர்வகுடிகளான கருப்பர்களுக்கு வெள்ளை அரசாங்கம் ஒரு உரிமையும் கொடுக்கவில்லை, அந்த அநீதியினை உலகம் கண்டுகொள்ளவுமில்லை
இதனை எல்லாம் கவனித்தான் அந்த சிறுவன், ஆயினும் இங்கு தேவை உரிமை அல்ல,கருப்பின மக்களின் ஆட்சி
என்ற சிந்தனைக்கு வந்தான்
சிறுபான்மை வெள்ளை குடியேறிகளை பெரும்பான்மை கருப்பர்களை திரட்டி வீழ்த்தலாம் என கனவு கண்டான்
அவன் வழக்கறிஞர் ஆயினும் அங்கு சட்டம் வெள்ளையருக்கே சாமரம் வீசிற்று, அதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதும் அவனின் போராளி முடிவுக்கு காரணம்
அவன் அப்பொழுது கொரில்லா போராளி, ஆம் உலகபோர் காலங்களில் பிரிட்டனை விரட்டலாம் என கனவு கண்ட நேதாஜி போன்றே அவனின் சிந்தனையும் இருந்தது, போராடினான்
ஆனால் அரசை ராணுவத்தால் வெல்லமுடியாது என அவனுக்கு பின்புபுரிந்தது, ஆனால் தன் தேசத்தில் உருவான காந்தி இந்தியாவில் வெள்ளையனை மிரட்டி கொண்டிருந்தார்
அந்த இளைஞனுக்கு அது ஆச்சரியமாயிற்று, ஹிட்லரும் இல்லா நிலையில் இனி வெள்ளையனை விரட்ட அஹிம்சையே வழி என உணார்ந்தான்
கருப்பு காந்தி நெல்சன் மண்டேலா இப்படித்தான் உருவானான்
ஆயுதவழி தோற்று, மக்களுக்கு பெரும் அழிவு நேரம் ஆரம்பிக்கும் நேரம் அவன் மனம் சுட்டது
மக்களை காவு கொடுப்பது கட்டபஞ்சாயத்து கும்பலின் பணி, காப்பதே நல்ல தலைவனின் பணி என உணர்ந்தான், காந்தி அவன் கண்முன் வந்தார், அவர் பெற்ற வெற்றி எல்லாம் அவனை மாற்றியது
காந்திய வழியே மக்களுக்கான வழி என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தார், காந்தியவாதியானார்
இன்றும் ஆப்ரிக்காவில் பல நாடுகளில் நல்ல தலைவர்கள் கிடையாது, ஒற்றுமை கிடையாது , ஒரு எழுச்சி கிடையாது ஒருமாதிரியாகத்தான் இருக்கின்றார்கள், அதில் தென்னாப்ரிக்கா மட்டும் பரவாயில்லை
மண்டேலாவின் வெற்றி அது
அன்றே கனவு கண்டார் மண்டேலா, கருப்பின மக்களுக்காக தன் வாழ்வினை அர்பணித்தார், கடும் போராட்டம்
ஒன்றல்ல இரண்டல்ல 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார், இருந்தபடியே போராடினார்
ஆனால் மண்டேலா தென்னாப்ரிக்கர்கள் வலியினை உலகிற்கு சொன்னபடியே இருந்தார், கடும் சிறையில் அவர்
இருந்தபொழுதும் உலகம் அவருக்காக களமிறங்கியது
தென்னாப்ரிக்கா உலக அரங்கில் ஒதுக்கபட்டது, கிரிக்கெட்டில் கால்பந்தில் கூட அது சேர்க்கபடவில்லை
தான் அடிபட்டு தன்னை வருத்தி சிறையில் தவமிருந்து உலகை தன்னை பேசவைத்து , தென்னாபிரிக்க அரசின் இனவெறி கோரமுகத்தை உலகிற்கு காட்டிய மகத்தான சாதனையினை செய்தார் மண்டேலா, ஒப்பற்ற தியாகம் அது
மெழுகு போல தன்னை வருத்தி ஒளிகொடுத்தார்
உலகில் மிக கொடுமையான முறையில் போராட்டங்களை அடக்கிய நாடுகளில் தென்னாப்ரிக்க அரசுக்கும் இடம் உண்டு, ஏராளமான கொலைகள் , துப்பாக்கி சூடுகள்
ஆனால் மண்டேலா அமைதியாக போராடினார், மக்கள் அவரை கொண்டாடினர். உலகம் மெதுவாக அவரை ஏற்றுகொண்டது
நீண்ட போராட்டத்தின் பின் வெளிவந்து ஆட்சியும் பிடித்தார் மண்டேலா, அதனை விட பெரிது ஒரு கட்டத்தில் அடுத்தவர் ஆட்சிக்கு வழிவிட்டார்
கருப்பின தலைவர்களில் மார்ட்டின் லுத்தர் கிங் வரிசையில் மண்டேலாவிற்கு பெரும் பங்கு உண்டு
ஆப்ரிக்க காங்கிரஸ் உட்பட பல அமைப்புகளை ஏற்படுத்தி கருப்பின மக்களின் ஒற்றுமைக்கும் எழுச்சிக்கும் எல்லைகளை தாண்டி பாடுபட்டார்
அவர் புகழ் அடைந்தது அதிகம், ஆனால் இழந்தது ஏராளம்
நல்ல வாழ்க்கையினை இழந்தார், குடும்ப வாழ்க்கையினை இழந்தார், இறுதிகாலத்தில் அன்புக்காக ஏங்கி திருமணம் எல்லாம் செய்தார்
ஆனால் ஒன்றும் சரி இல்லை, அம்மனிதன் ஒருநிமிடமும் நிம்மதியாக வாழவில்லை
கருப்பர் உரிமைக்காய் உழைத்த, கருப்பர்களின் நம்பிக்கையாக என்றுமே உணரபடும் தலைவர் மண்டேலா
அந்த கருப்பு காந்திக்கு உலகமே அஞ்சலி செலுத்துகின்றது
காந்தி உலகில் எத்தனை மனிதர்களை பாதித்தார், எத்தனை பேரை தன் பாணியில் உருவாக்கினார்
அதில் நிச்சயம் மண்டேலா எனும் கருப்பு காந்திக்கும் இடம் உண்டு
ஆனால் இந்தியாவில் இன்னொரு காந்தி உருவாகாமல் ஆனது பெரும் சோகம்..
