பினாமியாக கப்பல் பதிவு
என்னதான் பொருளாதார தடைகளை வீசினாலும் ஈரான் அதன் என்ணெய் வியாபாரத்தை முடிந்தளவு தொடர்கின்றது
அது தந்திரமான நகர்வில் நடப்பதால் அதை தடுக்க வரிந்து கட்டி கிளம்புகின்றது மேற்குலகம்
அதாவது ஈரானிய எண்ணெய் கொண்டுசெல்லபடுவது ஈரானிய கப்பல்களில் அல்ல மாறாக அதன் பினாமி கப்பல்களில் என்பது இப்பொழுது விஸ்வரூபமாகின்றது.
அதென்ன பினாமி கப்பல்
விஷயம் கொஞ்சம் விரிவாக பார்க்க வேண்டியது. எல்லா நாட்டுக்கும் வியாபாரம் அவசியம் ஆனால் ராஜதந்திர உறவுகள், அரசியல் பகைமை, மக்கள் எதிர்ப்பு என ஏகபட்ட விவகாரம் உண்டு
உதாரணமாக இலங்கை கப்பல் எல்லா நாட்டுக்கும் செல்லலாம், ஆனால் இஸ்ரேலிய கப்பல் செல்ல முடியுமா?
சிரிய கப்பல் அமெரிக்க பக்கம் செல்லமுடியுமா? அது பலத்த சிக்கலை ஏற்படுத்தும்
இதனால் இம்மாதிரியான நாடுகள் மிக அப்பாவியான சமத்து நாடுகளில் தங்கள் கப்பலை பதிவு செய்து அந்நாட்டு
கொடியுடன் கடலில் நீந்தவிடும்
அதை காணும் பாதுகாப்பு கப்பல்களும் இன்னும் சில சோதனைகளும் அவர்கள் இன்னொரு நாட்டு கப்பல்காரர்கள் என அவர்கள் போக்கில் இருப்பார்கள்
இப்படி பினாமியாக கப்பல் பதிவு செய்ய உலகில் பல நாடுகள் உண்டு
அட நம் அரசியல்வாதிகள் பணம் டிரஸ்டுகளிலும் மடங்களிலும் இருப்பதில்லையா? அப்படி உலக கப்பல் விவகாரங்களுக்கு சொர்க்கபுரியான சில நாடுகள் உண்டு
பனாமா, மொரிஷீயஸ், மார்ஷல் ஐலண்ட் என பல நாடுகள் இதற்காகவே இயங்குகின்றன
இதில் பனாமாவில் மட்டும் ஆயிரகணக்கான கப்பல்கள் பதிவு செய்யபட்டிருக்கின்றன
சமீபத்தில் பிரிட்டன் கடற்படையால் பிடிக்கபட்டிருக்கும் ஈரானிய எண்ணெய் கப்பல் பனாமா நாட்டு கப்பலாகின்றது,பனாமா கொடி பறக்கின்றது
ஆனால் பனாமா அது எங்கள் கப்பல் இல்லை என்கின்றது
விவகாரம் இப்படி இருக்க, பனாமா திடீரென நாங்கள் கடும் நடவடிக்கை எடுத்துவிட்டோம் 900 கப்பல்களின் பதிவினை ரத்து செய்கின்றோம், அவை எல்லாம் திருட்டுதனமாக பதியபட்டவை, நாங்கள் நேற்றிலிருந்து விழித்துவிட்டோம் இனி விழித்துகொண்டே இருப்போம் என சொல்லிவிட்டது
அவர்கள் 900 கப்பல்களை ரத்து செய்யமாட்டார்கள் மாறாக யாரோ கொடுக்க போகும் பட்டியலில் இருக்கும் கப்பல்களை ரத்து செய்வார்கள்
அது மிக சரியாக ஈரானிய கப்பலாக இருக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை
பலவருடங்களாக தூக்கத்தில் இருந்த பனாமா அரசினை எழுப்பிவிட்டது யாராக இருக்கும்?
இந்த கப்பல்களை ரத்துசெய் என ரகசியமாக பட்டியல் கொடுத்தவர்களாக மட்டும்தான் இருக்க முடியும்…
