நான் மாட்டுகறி உண்டேன், உண்டேன், உண்பேன்
மாட்டுகறி விருப்பம் என்றால் அதை உண்ண வேண்டிய அவசியம் இருந்தால் தனியாக உண்ணலாம், தன்னை போன்ற நண்பர்களோடு சேர்ந்து உண்ணலாம்
மாறாக மாட்டுகறி திருவிழா நடத்துகின்றேன் என சொல்லி அதை உண்ணாதோர் மனதை புண்படுத்துவதெல்லாம் கலவரம் ஏற்படுத்தும் செயல்
நான் மாட்டுகறி உண்டேன் என சத்தமாக சொல்லி திரிவதும், மாட்டுகறி விருந்து வைக்க போகின்றேன் என சொல்லி வம்பிழுப்பதும் சமூக அமைதிக்கு ஆபத்தானது..
நாமும் கவனித்து பார்க்கின்றோம், நீ உண்டது மாட்டுகறியா என யாரும் தேடிபிடித்து, ஆய்வக சோதனை செய்து தகறாறு செய்வதில்லை
மாறாக நான் மாட்டுகறி உண்டேன், உண்டேன், உண்பேன் என சத்தமிட்டு ஆர்ப்பாட்டம் செய்வதில்தான் சிக்கலே இங்கு வருகின்றது