இந்த சுயநலவாதிக்கு என்ன இருக்கின்றது?

சூர்யா என்பவர் மேல் கோபம் எதுவுமில்லை, அவர் அடிக்கடி பல சமூக விஷயங்களை பேசினால் விட்டுவிடலாம்

இதோ சமுத்திரகனி இருக்கின்றார், கல்வி சீரழிவு முதல் பல விஷயங்களை தன் படத்தில் வைக்கின்றார். அதில் பெரிதாக சம்பாதித்தாரா என்பதல்ல விஷயம், ஆனால் தன்னால் முடிந்ததை பேசுகின்றார், படமாக எடுக்கின்றார்

4 நல்ல விஷயங்களை இச்சமூகத்திற்கு சொல்ல நினைகின்றார், தன்னால் பொறுக்கமுடியாத விஷயங்களை சட்டென சொல்கின்றார்

அவர் நினைவாலும், சொல்லாலும் செயலாலும் சமூக பொறுப்போடு இருக்கின்றார்

சூர்யா அப்படி அல்ல‌

தன் மனைவியின் ராட்சசி படத்தின் சர்ச்சையும், அதற்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் காட்டிய எதிர்ப்புக்கு பின்பே அவர் அரசு பள்ளிகளை சாடுகின்றார், சந்தடி சாக்கில் புதிய கல்வி கொள்கையினையும் சாடுகின்றாராம்

சூர்யா நடிக்க வந்து கிட்டதட்ட 22 ஆண்டுகள் ஆனபின்புதான் அரசுபள்ளிகள் கண்ணுக்கு தெரிந்ததா?

அதுவும் மனைவிக்கு அரசுபள்ளி ஆசிரியர்களால் சிக்கல் வந்தபின்புதான் அவருக்கு சமூக பொறுப்பு வந்ததா?

இந்த சுயநலத்தினை என்ன சொல்வீர்கள்?

மனிதருக்கு தன் மனைவிக்கு ஆபத்து என்றவுடன் சமூக பொறுப்பு பீறிட்டு கிளம்பினால் அதை நீங்கள் கைதட்டி வரவேற்று கொள்ளுங்கள்

எம்மால் முடியாது அவரின் சுயநலத்தால் அவர் பூண்ட‌ சமூக போராளி வேடத்தினை நாம் கண்டிக்கத்தான் செய்வோம்

இந்த விஷயத்தில் சமுத்திரகனி பேசட்டும், அவருக்கு தகுதி இருக்கின்றது உரிமையும் அக்கறையும் இருக்கின்றது

இந்த சுயநலவாதிக்கு என்ன இருக்கின்றது?