இன்றைய உலகின் எதிர்பார்ப்பு

மாவோவின் கைக்கு ஆட்சி வரும்பொழுது மிகவும் பிந்தங்கிய விவசாய நாடு சீனா, கொரிய யுத்தம் போன்றவற்றாலும் இன்னும் பல காரணங்களாலும் சோவியத் யூனியன் ஆதரவு சீனாவுக்கு தொடக்கத்தில் கிடைத்தது

அதில் அணுகுண்டுவரை செய்தது சீனா, ஆனால் பொருளாதாரம் இன்றைய வடகொரியா போலத்தான் இருந்தது

மாவோ நமது தமிழக‌ நாம் தமிழர் போல விவசாயத்தில் தேசத்தை மாற்றுகின்றேன் என கிளம்பினான், அவன் செய்த மாணவர் புரட்சி எனும் அழிச்சாட்டியம் இன்றுவரை சீனாவின் கருப்பு பக்கம்

என்ன செய்தது மாவோ படை?

நகரங்களில் சும்மா நடந்து செல்பவனை பிடித்து விசாரிக்கும் அதாவது அவனின் பூர்வீகம், விவசாய பூமி உண்டா இல்லையா? என்றேல்லாம் ஏகபட்ட கேள்விகள்

அவனுக்கு கிராமத்தில் சொந்தமாக விவசாய நிலம் இருந்தால் அவ்வளவுதான், மாட்டுகறிக்கு பொங்கும் சில சங்கிகள் போல ஆக்ரஷமாக எழுந்து அப்படியே தூக்கி கொண்டு கிராமத்தில் கொண்டு போட்டு விவசாயம் பார்க்க மண்வெட்டி கொடுத்துவிடுவார்கள்

நகரங்களில் வேலை இன்றியோ அல்லது நிரந்தர வருமானமோ இல்லா எல்லோருக்கும் விவசாய வேலை வழங்கபட்டது.

நான்சிங், பிஜீங் , ஷாங்காய் உட்பட அந்த சைனாவின் பெரிய நகரங்களில் எல்லாம் இந்த அட்டகாசம் நடந்தது எல்லோரும் சொந்த ஊருக்கு விரட்டபட்டனர்

விவசாயம் தெரியாதவருக்கு சிக்கலே இல்லை, பொதுவுடமை அரசு என்பதால் எல்லோருக்கும் உழைக்க நிலம் வழங்க முடிந்தது, “விவசாயம் தெரியவில்லையா பன்றி வளர்த்துகொள் அது ஒன்றும் சிரமம் அல்ல உண்வு போட்டால் அதுவாக வளரும், நீ செய்ய வேண்டியது அதன் கழிவினை அள்ளுவது மட்டுமே , நாட்டுக்காக இதை செய்யமாட்டாயா?” என போதிக்கபட்டது

ஓரளவு படித்துவிட்டு மேற்படிப்புக்கு நகருக்கு வந்தவர்களும் விரட்டபட்டனர், இனி படித்து என்ன கிழிக்க போகின்றாய் போ விவசாயத்தை இல்லை பன்றி வாத்து வளர்த்து நாட்டை முன்னேற்று என விரட்டபட்டனர்

வாத்து பண்ணை, மீன் பண்ணை இன்னும் என்னவெல்லாமோ வந்தது, பால் பண்ணை மட்டும் வராது காரணம் சீனர்களுக்கு மாட்டுபால் போன்றவை பரிட்சயமில்லை

விவசாயத்தின் மூலம் நாட்டை தூக்கி நிறுத்த பெரும் கனவு கண்டார் மாவோ, கிட்டதட்ட ரஷ்யாவின் கூட்டுபண்ணை திட்ட சாயல் அது

சீனாவின் பெரும் கலாச்சாரம் விவசாயம், விவசாயத்தை மீட்டெடுக்கும் இந்த புரட்சி கலாச்சார புரட்சி என அவனால் கொண்டாடபட்டது

இதெல்லாம் 1966க்கும் 1976க்கும் இடையிலான காலங்கள்

ஆனால் சீனாவில் அது மாபெரும் குழப்பத்தை கொடுத்தது, விவசாயம் ஓரளவு வளர்ந்தாலும், பொருளாதாரம் முடங்கியது முக்கிய நகரங்கள் வெறிச்சோடின‌

அங்கிள் சைமனுக்கு அதிகாரம் கிடைத்தால் என்னாகுமோ அந்த கேலி கூத்துக்கள் எல்லாம் அங்கு நிஜமாக‌ அன்றே நடந்தன‌

எளிய தமிழ்பிள்ளைகள் போல அறிவுகெட்ட செம்படையினர் மாவோ சொல்வதை எல்லாம் செய்துகொண்டிருந்தனர், அது நாட்டுபற்று எனவும் சொல்லி பெருமைபட்டுகொண்டனர்

நாடு பெரும் குழப்பத்தில் சிக்கியது

மாவோவுக்கும் டெங் ஜியோ பிங்கிற்கும் ஒத்துவரவில்லை, கருத்து மோதல்கள் வெடித்தன. நாடு நாசமாகிகொன்டிருந்தது, எங்கும் குழப்பம் மாவோவுக்கு எதிரான மனநிலை வளரதொடங்கியது

மாவோ கலைஞர் கருணாநிதியினை விட தந்திரசாலி, எப்பொழுதெல்லாம் அவன் மேல் அதிருப்தி வருமோ அப்பொழுதெல்லாம் தேசமே ஒன்றாக அவனை தேடும்படி ஏதாவது செய்து விவகாரத்தை திசை திருப்பிவிடுவதில் கில்லாடி

அப்படித்தான் முதல்முறை அதிருப்தி வந்தபொழுது திபெத்தை பிடித்து இந்தியாவுடன் யுத்தம் புரிந்து நிலமையினை சீராக்கினான்

1962ல் இந்தியாவுடன் அப்படி செய்துதான் தன்னை காத்துகொண்டான் மாவோ

1966ல் இந்த கலாச்சார புரட்சியினை தொடக்கினான் 1973களுக்குள் நாடு நாசமாயிற்று

அப்பொழுது எழுந்த அதிருப்தியினை திசை திருப்ப சோவியத் ரஷ்யாவுடன் உரசினான், ஆனால் பலமிக்க சோவியத் சைனாவினை அடக்கி வைத்தது

இனி சண்டையும் இடமுடியாது, உள்ளூரிலும் அதிருப்தி எனும் நிலையில் உலகமே அதிரும்படியான காரியத்தை செய்தான் மாவோ

ஆம் அமெரிக்காவுடன் கைகோர்த்து இனி தொழில்துறையில் சீனா இறங்கும் என அறிவித்தான். ஒரு பொதுவுடமை நாடு அமெரிக்காவுடன் கைகோர்த்தது அன்று மகா ஆச்சரியம்

ரஷ்யாவினை தனிமைபடுத்துதல், வியட்நாம் போர் தோல்வி என பல திட்டங்களை வைத்திருந்த அமெரிக்காவும் அவனை அணைத்து கொண்டது

அன்று தொடங்கியது அமெரிக்க சீன உறவு ஆனாலும் அமெரிக்கா அள்ளிகொடுக்கவில்லை கிள்ளி கொடுத்தது

அத்தோடு மாவோ காலமாகி டென் ஜியோ பிங் காலம் வந்தது

அவனே அமெரிக்காவிற்கு சீனாவினை திறந்துவிட்டான், 1989ல் மாணவர்கள் பல்லலாயிரம் பேர் திரண்டு ஜனநாயகம் கேட்டபொழுது சில ஆயிரம் பேரை கொன்றுவிட்டு நாடே முக்கியம் என இரும்பாக இருந்தானே அந்த டெங்

இன்று காணும் சீனாவின் அரசு வளர்ச்சி டெங் கொடுத்தது அடுத்த 35 ஆண்டு காலத்தில் அது மாபெரும் வளர்ச்சி பெற்றது

நிச்சயம் சீனாவின் வளர்ச்சியில் அமெரிக்காவுக்கும் பங்கு உண்டு

என்னதான் இருந்தாலும் பெரும் மக்கள் சக்தி முதல் பல சக்திகளை கொண்ட நாடு, என்றோ ஒருநாள் முக்கிய எதிரியினை அழிக்க இந்த தற்காலிக எதிரியினை நண்பனாக்கினோம், இனி இவன் முழுக்க வளர்ந்துவிட்டால் நம் கதி என்னாகும் என்ற கவலை அமெரிக்காவுக்கு வந்தது

அதுவும் டிரம்ப் காலத்தில் உச்சம் தொட்டது, முறுகல்கள் வந்தன‌

வரம் கொடுத்த அமெரிக்காவே சீனாவின் பேட்டரியினை உருவிற்று

இப்பொழுது வேகமாக சரிகின்றது சைனா, கடந்த 3 மாதத்தில் மட்டும் அதன் சரிவு 6.7 சதவீதமாக எகிறியிருக்கின்றது

இது கடந்த 30 வருடத்திற்கு முந்தைய நிலை

ஆக எந்த அமெரிக்கா அவர்களை உயர்த்திவிட்டதோ அது இனி சீனா வளர கூடாது என முடிவெடுத்து தன் கரங்களை விலக்கிவிட்டது

அதில் வேகமாக சரிகின்றது சீன பொருளாதாரம்

இதிலிருந்து சைனா எப்படி மீண்டு வரபோகின்றது என்பதை உலகம் மிக உன்னிப்பாக பார்த்துகொண்டிருக்கின்றது.

மாவோ, டெங் வரிசையில் அமர்ந்திருக்கும் ஜிபெங்கின் வழிகாட்டல் எப்படி இருக்குமோ என்பதுதான் இன்றைய உலகின் எதிர்பார்ப்பு