திராவிட ஜோதிட சிகாமணி பாலாஜி ஹாசன்

பாரிசாலனுக்கு பின் திடீரென வைரலாகி எல்லோரிடமும் கும்மாங்குத்து வாங்கிகொண்டிருப்பவர் திராவிட ஜோதிட சிகாமணி பாலாஜி ஹாசன்.

இளம்வயது பயமறியாது பக்குவமும் அறியாது என்பார்கள் இவர் விஷயத்தில் அது சரி.

ஜோதிடம் என்பது கணக்குத்தான், கட்டங்களை எண்ணி இன்னும் பலவற்றை கணக்கிட்டு சொல்லும் வழிதான்

ஆனால் அதன் அடிநாதம் கணக்கு அல்ல, பக்தி. முழு பக்தி, கடவுளுக்கு தான் ஒருஅடிமை எனும் சித்தனின் மனநிலை

அந்நிலை பணத்தை தேடாது, புகழை தேடாது. தன்னை நாடிவருபவருக்கு மட்டுமே சில பதில்களை கடவுள் பெயரில் நல்ல ஜோசியன் சொல்வான்

சாஸ்திரங்களையும் , வேதங்களையும் , கடவுளை பிரதிபலிக்கும் சில உன்னத கலைகளையும் எல்லோரும் படித்துவிட முடியாது

ஜோதிடம் என்பது சாஸ்திரம் மட்டுமல்ல, அது ஒரு வழிபாடு. மிக மிக மனசிக்கலில் அல்லது பெரும் உதவி தேவைபடுபவனுக்கு அவனின் பிறப்பின் நோக்கத்தை, எத்திசையில் அவன் செல்ல வேண்டும் என்பதை சொல்லும் அற்புதமான ஏற்பாடு

பண்டைய ஞானிகள் அதை ஏற்படுத்தி அரசனுக்கு காவலாய் இருந்து நாட்டை வழிநடத்தியிருக்கின்றார்கள்.

எல்லா நாட்டு அரசுகளிலும் அப்படி ஒருவன் அரண்மனை ஜோதிடன், ராஜகுரு என இருந்திருக்கின்றான். அரசனை வழிநடத்தியிருக்கின்றான்

நல்ல சாஸ்திர ஞானி என்பவன் காசுக்கு ஆசைபட கூடாது, ஒருவனின் ஜாதகத்தின் பாதகாமான அம்சங்களை சொல்லி பயமுறுத்தல் கூடாது. எதிரி எனினும் அவனுக்கு உதவிடல் வேண்டும்

சுயநலம் என்பது சிறிதும் இருக்க கூடாது. மகா முக்கியமாக அனுதினமும் பூஜையில் அமர்ந்து கடவுளுடன் கலந்திருக்க வேண்டும்

எங்காவது காசுக்கோ அல்லது சுயநலனுக்காகவோ சறுக்கினால் அந்த வித்தை பலிக்காது

இது முழுக்க முழுக்க கடவுளின் உத்தரவுபடி அடுத்தவருக்காக வாழும் ஒருவகை வேள்வி

அதை முழுக்க பின்பற்றுவது மகா கடினமும் சிரமுமானது.

இதனால்தான் போலிகள் பெருகி நல்ல ஜோசியர்கள் சுருங்கிவிட்டார்கள், ஆங்காங்கு இருந்தாலும் வெளிவருவதில்லை

உண்மையான ஜோதிடன் மீடியா முன் வரமாட்டான், வலிந்து அரசியல்வாதிகள் முன் தோன்றவுமாட்டான்

வீண் விளம்பரத்தில் சிக்கவும் மாட்டான்

எவனாவது ஒரு பகுத்தறிவு கட்சியின் மேலிடத்துக்கு ஜாதகம் பார்த்துவிட்டு அதை வீதியில் சொல்வானா? இதனால் அந்த குடும்பத்துக்கு நெருக்கடி வரும் என்பது அவனுக்கு தெரியாதா?

தெரியும், ஆனாலும் பக்குவற்ற தன்மை அதை மறைத்துவிடுகின்றது. தன்னை நம்பி பேசிய துர்கா ஸ்டாலினையே சிக்கலில் இழுத்துவிட்டிருகின்றார் அன்னார்.

அந்த அம்மணியும் பெரும் வித்தகர்கள் எல்லாம் இருக்கும் நாட்டில் இவரிடம் என்ன ஆலோசனை கேட்டது என்பதுதான் தெரியவில்லை

இந்த பாலாஜி ஹாசன் மாபெரும் போலி ஜோதிடர் என்பது மட்டும் தெரிகின்றது, இன்னும் என்னென்ன காமெடிகள் எல்லாம் செய்வாரோ தெரியாது

ஆனால் ஒரு நாள் திமுக மேலிடத்திடம் செமத்தையாக வாங்கபோவது மட்டும் உறுதி, அது விரைவில் நடக்கலாம்