இந்திய நலனுக்கு உகந்தவை அல்ல
புலிகள் காலத்திற்கு பின்பு , குறிப்பாக ஏப்ரல் மாத குண்டுவெடிப்பு காட்சிகள் இலங்கையில் கடுமையாக மாறி இருக்கின்றன
பருவபெண் ஒருத்தி வீதியில் விழுந்து கிடந்தால் எப்படி ஓடி ஓடி உதவுவார்களோ அப்படி ஆளாளுக்கு கவனிக்கின்றார்கள்
ஏற்கனவே இஸ்ரேலும் அமெரிக்காவும் மே இன் கம் இன் என கேட்காமலே ஓடி சென்று இலங்கையினை தாங்குகின்றன
இந்தியா கடந்தவருடமே அவர்களுக்கு ஒரு கப்பல் கொடுத்து நண்பேண்டா என சொல்லிவிட்டு வந்துவிட்டது
இப்பொழுது சீனாவின் முறை, அவர்களும் ஒரு பெரிய கப்பலை தானமாக கொடுத்து யாகத்தில் சேர்ந்துவிட்டார்கள்
மிக மிக கொடுத்து வைத்தநாடு இலங்கை
அவர்கள் கப்பல்படையின் 53 கப்பல்களும் இப்படி அன்பளிப்பாகவே வந்தவை
இதில் ஒரு விஷயம் இப்பொழுது ஆபத்தானது
சீனா கொடுத்திருக்கும் கப்பலை இந்திய எல்லையில் நிறுத்தபோவதாக இலங்கை அறிவித்திருக்கின்றது, சிக்கல் அது அல்ல
உண்மையில் எது ஆபத்து என்றால் அது முழுக்க சீன கப்பல், அதை இயக்க கூட இலங்கை மாலுமிகளுக்கு சீனாதான் பயிற்சி அளிக்கின்றது
அப்படிபட்ட சீன கப்பலில் இந்தியாவினை உளவுபார்க்க எவ்வளவு ரகசிய விஷயங்கள் இருகின்றதோ என யாருக்கு தெரியும்?
இதைத்தான் சந்தேக கண்ணோடு இந்தியா நோக்குகின்றது
ஒருவேளை இதற்காத்தான் இந்தியா ஏற்கனவே ஒரு கப்பலை கொடுத்து இலங்கை கடற்படையில் கலந்துவிட்டதோ என்னமோ?
இலங்கையில் ஆளாளுக்கு வந்து அகதளம் செய்துகொண்டிருக்கின்றார்கள், இன்னும் என்னவெல்லாம் சுவாரஸ்ய காட்சிகள் நடக்குமோ தெரியாது
ஆனால் ஒன்று தெரிகின்றது, இவை எல்லாம் இந்திய நலனுக்கு உகந்தவை அல்ல. இந்தியாவின் பதிலடி கடுமையாக இராமல் இதை தடுக்க முடியாது.
