அக்கியூஸ்ட் No1
இந்திய சினிமா தொடக்கத்தில் கடவுள் படங்களும், புராண படங்களுமாகவே வந்தன
பராசக்தி கூட சமூக கேள்விகளை கேட்டதே தவிர இந்து தெய்வங்களை சாடவில்லை, பக்தியினை தொடவில்லை
அதன்பின்னும் ஏகபட்ட பக்திபடங்கள் வந்தன
இந்து தெய்வங்களையும் அவர்கள் நம்பிக்கையினையும் கிண்டல் செய்யும் காட்சிகள் 1980க்கு பின்பே வந்தன, மிக கடுமையான கிண்டல்களையும் சீண்டல்களையும் அவை செய்தன
குறிப்பாக பிராமண சமூகத்தையும் இந்து தெய்வங்களையுமே சீண்டுவார்களே தவிர மற்ற மதத்து பக்கம் தலைவைத்தும் படுக்கமாட்டார்கள்.
ஏனென்றால் பிராமணன் திருப்பி அடிக்கமாட்டான், இந்துக்கள் எதையும் பெரிதாக எடுக்கமாட்டார்கள்
ஏகபட்ட படங்கள் வந்தன, குறிப்பாக கமலஹாசன் மணிவண்ணன் போன்றோரின் விஷமபடங்கள்
யார் இவர்களை இயக்குவார் என்பது தெரியாது ஆனால் ஆடினார்கள்.
இப்பொழுது அவர்கள் ஓய்ந்துவிட்டார்கள், புது கோஷ்டி கிளம்பியிருக்கின்றது.
தர்மபிரபு எனும் படத்தில் இந்துக்களின் பாத்திரங்களான எமனையும் இன்னும் பலரையும் கடுமையாக கேவலபடுத்தியிருந்தார்கள்
இதே சொர்கத்தில் கிறிஸ்தவ தெய்வங்களை இப்படி செய்து படமெடுத்தால் நாடு தாங்குமா?
“டாவின்சி கோடு” என வெள்ளைக்காரன் கிறிஸ்துவினை சொல்லி எடுத்தபடமே இந்தியாவுக்குள் வராமல் விரட்டபட்டது
முகமது நபி கார்ட்டூனுக்கே என்னவெல்லாமோ நடந்தது
ஆனால் இந்துக்களின் தெய்வங்களையும் அவர்கள் கோவில் பூசாரிகளையும் எவ்வளவும் சீண்டலாம், இழுத்து போட்டு அடிக்கலாம்
சிறுபான்மையினர் தெய்வங்களை சீண்டினால் அவர்கள் மனம் புண்பட்டுவிடுமாம், ஏன் இந்துக்களுக்கு மனம் இல்லையா? அது வேதனைபடாதா?
இந்த இம்சை படங்கள் வரிசையில் சந்தாணத்தின் ” அக்கியூஸ்ட் No1″ படம் வந்திருக்கின்றது
அதே போல காட்சிகள் வந்து பலத்த சர்ச்சையினை ஏற்படுத்தியிருக்கின்றது
இந்த NIA சட்டதிருத்தம் போல, சென்சார் போர்டுக்கும் சில கடுமையான சட்டங்களை விதிக்கவேண்டிய நேரமிது..