Today’s News 19/07/2019

பாராளுமன்றத்தில் அணல் தெறிக்க பேசினார் தமிழச்சி தங்கபாண்டியன் : உபிக்கள் சிலிர்ப்பு

அம்மணி எவ்வளவுதான் விளக்கமாக பக்கம் பக்கமாக பேசினாலும் கடைசியில் “அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்” என்ற வகையில் சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள் என்பதுதான் விஷயம்..

37 எம்பிக்கள் சென்றனர், அதில் 4 பேர்தான் மாறி மாறி பேசுகின்றனர்

மீதி 35 பேரை காணவே இல்லை, நிச்சயம் அங்குதான் எங்காவது சுற்றிகொண்டிருக்க வேண்டும். காணாமல் போனதாக புகார் எல்லாம் இல்லை என்பது ஆறுதல்

இந்த‌ ஜோதிமணி என்பவர் பாஜகவில் ரகசியமாக சேர்ந்துவிட்டார் போல, சத்தமே இல்லை

அத்திவரதர் ஏன் அந்த 4 பேரை காப்பாற்றவில்லை : திராவிட பகுத்தறிவாளர்கள் கேள்வி

திமுக மேலிடமும் தா.கிருட்டினன் முதல் சாதிக் பாட்சா வரை பலரை காக்கவில்லை, தெய்வங்கள் சில நேரம் அப்படித்தான்.

என்ன திருமா சார். “அடங்க மறு.. அத்து மீறு”ன்னு சிதம்பரம் பக்கம் முழங்கிட்டு, பார்லிமென்ட்ல NIA சட்ட திருத்தம் பார்த்த உடனே அலறி அடிச்சி ஓடியே போயிட்டீங்களாமே?

அப்படியா?