சரவணபவன் ராஜகோபாலை மறக்க முடியல அண்ணாச்சி
ஒரு மாதிரி சோகமாக வந்தான் அறை நண்பன், முக ஸ்டாலின் தலைவர் பதவியினை விட்டு ஓடிவிட்டது போலவோ இல்லை உதயநிதி ஸ்டாலின் தலைமறைவானது போலவோ அவன் முகத்தில் அவ்வளவு சோகம்
மனிதன் முதலில் பேசவில்லை, மெதுவாக பேசினான்
அண்ணாச்சி, என்ன இருந்தாலும் அந்த சரவணபவன் ராஜகோபாலை மறக்க முடியல அண்ணாச்சி
ஏண்டா?
உமக்கென்ன நீரு என்ன தின்னுட்டு போனாலும் வேளாங்கண்ணி மாதா வருத்தபடாது, எங்களுக்கு அப்படியா சபரிமலை, உள்ளூர் கோவில்னு எவ்வளவு விரதம் தெரியுமா?
அதுக்கென்னடா?
அண்ணாச்சி, மலேசியா பத்தி உமக்கு தெரியும். அசைவத்துக்கு இது சொர்க்கம் ஆனால் சைவத்துக்கு நரகம். நல்ல சைவ சாப்பாட்டுக்கு ஊரெல்லாம் சுத்தினாலும் கிடைக்காது, மலாய் சீன மக்கள் நல்லவங்க ஆனா அவங்க கலாச்சாரத்துல சைவ உணவு கிடையாது
ஆமாடா
அங்கதாண்ணே அண்ணாச்சி கைகொடுத்தார், விரதம் இருக்கும் பொழுதெல்லாம் அவர் கடைதாண்ணே அடைக்கலம் , சுத்தமான சைவம்ணே. கடல்கடந்து அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சது ஆண்டவன் கருணை அண்ணாச்சி
விரதம்ணா விளையாட்டு இல்ல அண்ணாச்சி, 15 மணிநேரம் பசியோட வேலை, கருப்பு சட்டை கருப்பு வேட்டியோட சைவ உணவுக்கு அலையணும், கோலாலம்பூர்ல யார் அண்ணாச்சி 100% சைவம் கொடுப்பா?
ஆமாடா?
அவர் கொடுத்தார் அண்ணாச்சி, வகை வகையா கொடுத்தார். காசும் அதிகம் இல்ல அண்ணாச்ச்சி, அஞ்சப்பர வச்சி பார்த்தா சரவணபவன் அதிகமே இல்ல, அதிலும் மாலை போட்டு போனா பில்லு கனுசமா குறையும் அண்ணாச்சி
அப்படியா?
என்ன மாதிரி உலகம் பூரா எவ்வளவு பக்தர்கள் இருப்பாங்க அண்ணாச்சி? அவரு உழைப்பின் பலன் கொஞ்சம் இல்ல.
அண்ணாச்சி ஊர் உலகம் அவர பத்தி என்னமும் சொல்லட்டும், எங்கள பொறுத்த வரைக்கும் ஐயப்பன் தன் பக்தர்களுக்காக குறிப்பாக அயல்நாட்டு பக்தர்களுக்காக தேர்ந்தெடுத்து அனுப்பிய ஆள் அண்ணாச்சி, எல்லா மனுஷணும் தொழில் செய்வான், ஆனா பக்தர்களுக்காக நல்ல உணவு கொடுத்த மகராசன் அண்ணாச்சி அவரு.
அண்ணாச்சி மனுஷன் இந்துக்களுக்காக சோறு மட்டுமா போட்டாரு, வனதிருப்பதில கட்டி வச்சிருக்காரு பாருங்க கோவில், எந்த மனுஷணுக்கு அப்படி தோணும்? மனுஷன் அப்படி நல்ல மனுசனா இருந்திருக்காரு.
ஜீவஜோதி விவகாரம் அவரு சொந்த விஷயம், ஆனால் அவருக்கு போட்டியா செலவழிக்கிற அளவுக்கு 20 வருஷமா பணமும் உதவியும் எங்கிருந்து வந்து அண்ணாச்சி? இதெல்லாம் கேட்க முடியாது அண்ணாச்சி
ஆனா உண்மை ஒருநாள் வெளிவரும் அண்ணாச்சி
அண்ணாச்சி ஏன் வெற்றிபெற்றார் என்றால் அவரின் தொழிலில் ஆன்மீக நோக்கமும் இருந்திருக்கின்றது.
இந்த புதுக்கோட்டை அய்யப்ப்பன் வேலு என்பவன் ஐயப்ப பக்தன் அண்ணாச்சி, அவரு போட்ட சுத்தமான சோறுக்காக ஒரு ஐயப்ப பக்தனாக என்னைக்கும் அவருக்காக பிரார்த்திப்பான் அண்ணாச்சி, எனக்கு நன்றி இருக்கு அண்ணாச்சி
அந்த ஐயப்பன் அவர் குடும்பத்துக்கு ஒரு குறையும் வைக்க மாட்டான் அண்ணாச்சி..
சரவணபவன் மாதிரியே அந்த வனதிருப்பதி கோவிலும் கண்ணும் கருத்துமா பார்த்துகணும் அண்ணாச்சி, அதுதான் ரொம்ப முக்கியம், எப்படி கோவிலா கட்டியிருக்காரு தெரியுமா அண்ணாச்சி?
சொல்லும்பொழுதே அவன் கண்களில் கண்ணீர் வந்தது, மனிதன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து பேசியிருந்தான். அவன் சொல்லியதில் மிகை ஏதும் இருப்பதாக தெரியவில்லை
இவ்வளவு இளகிய மனம் கொண்ட நல்லவன் ஏன் திமுகவில் இருக்கின்றான் என்பத்துதான் தெரியவே இல்லை, கேட்டால் சரவணபவன் அண்ணாச்சியிடம் நம்மை அனுப்பிவிடுவான் என்பது வேறுவிஷயம்..