திமுக அதிமுக இணைப்புக்கு அழைப்பு?

முக ஸ்டாலினின் நேற்றைய பேச்சு திமுக அதிமுக இணைப்புக்கு அழைப்பு விடுத்ததாக சில அரசியல் பக்கங்களில் கணிக்கபடுகின்றது

கலைஞரின் கனவு இரு கட்சிகளும் இணையவேண்டும் என்பதிலேதான் இருந்தது, அதை மறுக்கமுடியாது

1971 தேர்தலில் திமுக அபார வெற்றிபெற “இனி திமுகவினை வெல்ல இன்னொரு திமுகத்தான் உருவாக வேண்டும்” என பகிரங்கமாக சொல்லபட்டது

சட்டென ராமசந்திரன் உருவாக்கபட்டார், அதுவரை கோமாவில் இருந்தவர் போல் சில கேள்விகளை கேட்டார், தனி கட்சி கண்டார், பெரும் தலைவலியானார்

11 வருட ஆட்டத்துக்கு பின் தீரா தலைவலி ஒன்றை உருவாக்கிவிட்டும் சென்றுவிட்டார்

திமுக அதிமுக உடைந்திருந்தபொழுது அதை இணைக்க பலர் முயற்சி செய்தனர், அதில் பிஜூ பட்நாயக்கும் இருவர்

கலைஞர் எவ்வளவோ இறங்கி வந்தார், கட்சி இணையட்டும் ஆட்சி ராமசந்திரன் வசமே இருக்கட்டும் என்றெல்லாம் பேசிபார்த்தாலும் ராமசந்திரன் இணையும் முடிவுக்கே வரவில்லை

அவருக்கான நிர்பந்தம் டெல்லியில் அப்படி இருந்தது

ராமசந்திரனுக்கு உள்ளூர இணைய ஆசை கடைசி காலங்களில் இருந்தது ஆனால் சுற்றி இருந்த கூட்டம் விடவில்லை என்பது அக்கால செய்தி

அதன் பின் அதிமுக ஜெயாவின் அதிரடியில் தொடர , திமுக வைகோ தலமையில் மறுபடி உடைந்தது

ஆனால் ஊதாரி மகன் போல வைகோ சரிந்துகொண்டிருந்த பொழுதே அவரை கட்சியில் சேர்க்க கலைஞருக்கு விருப்பம் இருந்தது, ஆனால் வைகோவின் குடுமியினை பிடித்திருந்த கரம் விடவே இல்லை

இன்று எல்லாம் மாறிவிட்ட காலங்கள், வைகோ திமுகவில் இணைந்தேவிட்டார், வேறு தெரிவு அவருக்கும் இல்லை

ஸ்டாலின் கலைஞரின் நிறைவேறா கனவுகளுக்கு மெல்ல உயிர்கொடுக்க பார்க்கின்றார்

அவரின் நேற்றைய பேச்சு அதைத்தான் சொல்கின்றது

இரு கட்சியும் இணையுமா இல்லையா என்றால் இணைய வாய்ப்பு உண்டு

எப்பொழுது தெரியுமா?

நாளையே திமுக ஆட்சி வந்துவிட்டது இந்த பன்னீர் பழனிச்சாமி எல்லாம் எதிரணி என ஆகிவிட்டது என்றால், லேசாக கண்ணை காட்டினால் போதும், அட அது கூட வேண்டாம் அவர்களாக வந்து திமுகவில் இணைந்துவிடுவார்கள்.

அவர்களுக்கு கொள்கை, கோட்பாடு, தலமை, நன்றி,விசுவாசம் என எதுவுமே இல்லாததால் அவர்கள் ஓடிவந்து சேர தடை எதுவுமே இல்லை..

அது தெரியாமல் ஸ்டாலின் பேசிகொண்டிருக்கின்றார் பரிதாபம்