இனியாவது பாகிஸ்தான் திருந்தட்டும்..

அந்த காலகட்டம், அதாவது இரண்டாம் உலகபோருக்கு பின்னரான காலங்களில் பாகிஸ்தானின் தேவை அமெரிக்காவுக்கு அப்படி இருந்தது

அன்று சோவியத், சீனா என செங்கொடி பறந்த நிலையில், அரபு நாடுகளில் இஸ்ரேலிய எதிர்ப்பு உச்சத்தில் இருந்த நிலையில் தனக்கொரு பிடி கிடைக்காதா என ஏங்கி தவித்த பொழுது பாகிஸ்தானே அவர்களுக்கு ஆறுதல்

அதுதான் அவர்களுக்கு பெரும் நிம்மதி, பாகிஸ்தான் மட்டும் இல்லை என்றால் 1980களில் தலைவெடித்து செத்திருக்கும் அமெரிக்கா

பாகிஸ்தானில் கால் ஊன்றி இந்தியாவினை அவர்களால் மிரட்ட முடிந்தது, சில போர்களுக்கே காரணமாக முடிந்தது

அதில் இருந்து கொண்டே ஆப்கனில் இருந்து சோவியத்தை விரட்ட முடிந்தது

ஈரானிய புரட்சிகாலங்கள் போன்றவற்றில் பாகிஸ்தானின் கழுத்தில் இருந்துகொண்டே அவர்களால் ஆடமுடிந்தது

ஆசியாவில் அவர்களின் ஏகபோக கூட்டாளியாக பாகிஸ்தான் கொண்டாடபட்டது

எல்லா பாகிஸ்தானிய ஆட்சியாளர்களும் அவர்களுக்கு செல்லபிள்ளையானார்கள்

அவர்கள் எது செய்தாலும் அமெரிக்க ஆசி உண்டு, அது மக்கள் பிரதமரோ இல்லை ஜியா உல்ஹக் போன்ற ராணுவ ஆட்சியோ அவர்களுக்கு சிக்கலே இல்லை

ஆனால் கொஞ்சமும் உழைப்பே இல்லாத, ஊரான் பணத்தில் கடும் ஆட்டம் ஆடுபவன் வாழ்வு எவ்வளவு நாள் நிலைக்கும்?

பின்லேடன் விவகாரத்துக்கு பின்பு பாகிஸ்தானிய அமெரிக்க உறவுகள் கசந்தன, அதுவரை தரு நிழலாக விளங்கிய பாகிஸ்தான் அதன்பின் கள்ளிசெடியானது, அதற்கு ஏன் நீர்பாய்ச்ச வேண்டும் என முணுமுணுத்தது அமெரிக்கா

டிரம்ப் எனும் வம்பானவர் வந்து மொத்தத்தையும் மூடிவிட்டார்

இம்ரானின் பாகிஸ்தானுக்கு சோதனையான காலம்

எத்தனையோ பாகிஸ்தானிய ஆட்சியாளர்கள் சிகப்பு கம்பளத்தில் வலம் வந்த அமெரிக்காவில் வாழ்ந்தொடிந்த ஏழை போல் நிற்கின்றார் இம்ரான்

ஒரு நாட்டின் அரச பீடத்துக்கான மரியாதை ஏதும் அவருக்கு இல்லை

அவமானத்தின் உச்சியில் பாகிஸ்தான் நிற்கின்றது, ஆனால் என்ன செய்துவிட முடியும்?

அமெரிக்கா எப்படிபட்ட நாடு என்பதையும், தேவைக்கு அணைப்பார்கள் தேவையில்லை என்றால் வெட்டி வீசுவார்கள் என உணர்ந்து தலைகுனிந்து நிற்கின்றது பாகிஸ்தான்

பாகிஸ்தானை தீவிரவாதங்களின் கூடமாக மாற்றியதில் அமெரிக்காவுக்கு பெரும் பங்கு உண்டு, அவர்கள்தான் அந்நாட்டை இப்படி ஆக்கினார்கள்

இன்று அவர்களே வெட்டியும் விடுகின்றார்கள்

மதவெறி ஒன்றில் ஊறி செய்யகூடா காரியங்களை எல்லாம் செய்த பாகிஸ்தான் இன்று சர்வதேச அரங்கில் தலைகுனிந்து நிற்கின்றது

அருமை பாரதம் தலை நிமிர்ந்து நிற்கின்றது , அமெரிக்கா கூட இந்தியாவிடம் அதிகம் பேசமுடியவில்லை

மதவாதமும் தீவிரவாதமும் அதை வைத்து செய்யபடும் உலக அரசியலும் எவ்வளவு ஆபத்தானது என்பதை உலகிற்கு சொல்லி அமெரிக்காவில் அவமானமாக நிற்கின்றது பாகிஸ்தானின் உச்சபீடம்..

இனியாவது பாகிஸ்தான் திருந்தட்டும்..