நல்ல வேளையாக காமராஜருக்கு குடும்பமும் வாரிசும் இல்லை

நேரு குடும்பத்தை தவிர யார் தலைவரானாலும் கட்சி ஒரே நாளில் உடையும் : அனில் சாஸ்திரி

இப்பொழுது பெரும் கட்சியாக அது இருந்து என்ன கிழித்தது என கேட்டுவிடலாம் , ஆனால் இப்படி சொல்லியிருப்பவர் யாரென பார்த்தால் பெரும் பரிதாபமே மிஞ்சுகின்றது

ஆம் அவர் மாபெரும் தியாகி லால்பகதூர் சாஸ்திரியின் மகன்

இந்தியா கண்ட பிரதமர்களிலே தனித்து நின்றவர் சாஸ்திரி, காலம் வழிவிட்டிருக்குமானால் நேரு,இந்திரா மோடி என எல்லோரையும் தள்ளிவிட்டு முதலிடத்தில் நின்றிருப்பார்

இன்றும் இந்திய வரலாற்றை புரட்டுங்கள், அவர் ஆண்ட இரு ஆண்டுகாலம் அப்படி ஒரு பொற்காலம்

அந்த மாபெரும் தியாகியின் மகனே கட்சிக்கு நேரு குடும்பத்திடம் மண்டியிட்டு நிற்கும்பொழுது என்ன சொல்லிவிட முடியும்?

நேரு உழைத்ததை விட அக்கட்சிக்கு சாஸ்திரி அதிகம் உழைத்தார், பணக்கார நேரு அரசியலுக்கு வந்தது விஷயம் அல்ல ஏகபட்ட சொத்து உண்டு

ஆனால் ஏழை சாஸ்திரி நாட்டுக்காக வாழ்க்கையினை தொலைத்தான் அல்லவா? அதுதான் தியாகம்..

இதெல்லாம் கால கொடுமை என்பதையன்றி வேறு ஒன்றும் சொல்லமுடியாது

நல்ல வேளையாக காமராஜருக்கு குடும்பமும் வாரிசும் இல்லை