இதென்ன மரியாளின் மலை வாழ்க என்ற கோஷம்?
போப்பாண்டவரின் பிரதிநிதியாக சுற்றிகொண்டிருக்கும் தெற்கு கள்ளிகுளத்து அருட்தந்தையே
மரியே வாழ்க என்றுதானே சொல்வார்கள், இதென்ன மரியாளின் மலை வாழ்க என்ற கோஷம்?
பவுர்ணமி அன்று மலையினை சுற்றுவாயாக , அது மரிவலம் என அழைக்கபடும் என பைபிள் சொன்னதா?
இல்லை மாதா காட்சி கொடுத்து சொன்னாரா?
இதெல்லாம் திருவண்ணாமலை காட்சி அல்லவா? அதை இப்படி எல்லாமா காப்பியடிப்பீர்கள்?
இதை பார்த்தால் இந்து முன்னணி கோஷ்டி இளிக்காதா? ஆர்.எஸ்.எஸ் கோஷ்டி சிரிக்காதா?
ஒரிஜினல் காப்பி ரைட்ஸ் திருவண்ணாமலை அல்லவா? அவர்கள் ஏதும் சொன்னால் என்னாகும்?
அந்த மலையில் சக்தி வாய்ந்த மாதா இருக்கின்றாரோ இல்லையோ சக்தி வாய்ந்த தொலைதொடர்பு கோபுரம் உள்ளது, அந்த அருளையும் வாங்குங்கள்
மலையினை சுற்றி பவுர்ணமியில் நடங்கள் என்றால் ஊர் நடுவே கோவில் எதற்கு? அம்மாவசை அன்று வணங்கவா?
எல்லாம் அந்த மலையினை சுற்றி நிலத்தை வளைத்திருக்கும் ரியல் எஸ்டேட் கோஷ்டிகளின் அட்டகாசம், இதில் மாதா கோவில் சிக்கிவிட்டதுதான் சோகம்
அடுத்து என்ன மாதா பக்தாஸ்?
எல்லாவற்றையும் இந்துக்களிடமிருந்து காப்பியடித்த பின் எதற்கு பங்குதந்தையும் திருப்பலியும்?
பேசாமல் ஒரு அர்ச்சகரை நியமித்து “ஓம் மேரிமாத நமஹ , ஓம் மேரிசுதன் நமஹ” என ஆரம்பித்துவிட வேண்டியதுதானே
மகா முக்கியமான விஷயம் கோவிலுக்கு இன்னும் தெப்பகுளம் இல்லை, உடனே கட்டிவிட்டால் அடுத்து தெப்பதிருவிழாவும் நடத்திவிடலாம்..
